தேசிய சிறுதொழில் கழகத்தின் செயல்பாடுகள்



வழிகாட்டல்

தேசிய சிறுதொழில் கழகம் (National Small Industries Corporation  NSIC ) இந்தியா முழுவதும் கிளை அமைப்புகளைக்கொண்டு செம்மையாகச் செயல்பட்டுவரும் இந்திய அரசின் மினி ரத்னா நிறுவனமாகும். 1955-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அவற்றைத் தொடங்குவதற்கும் தேவையான உதவிகளை அளித்து வருகிறது.இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்...

நீங்கள் புதிய தொழில் தொடங்கவும், ஏற்கனவே உற்பத்தி செய்து வரும் தொழில் அதிபர்கள் தாங்கள் தங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்த கடன் பெறவும், உற்பத்தி செய்யும் பொருட்களை மத்திய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும், உங்கள் தொழிற்சாலை எந்த நிலையில் உள்ளது என தரச் சான்றிதழ் பெறுவதற்கும், நம் நாட்டிலும் அயல் நாட்டிலும் நடைபெறும் கண்காட்சிகளில் உங்களின் உற்பத்திப் பொருட்களைக் காட்சிபடுத்தவும்,

தங்கள் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய அதனைப் பற்றிய வழிகாட்டல் மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தல், மத்திய மாநில அரசின் டெண்டர்களில் கட்டணமில்லாமல் விண்ணப்பிக்கவும் மற்றும் விண்ணப்பிக்கும்போது நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய முன்பணம் முழுவதிலுமிருந்து விலக்கு பெறுவதற்கும் என எண்ணற்ற சேவைகளை செய்ய காத்திருக்கும் நிறுவனம்தான் மத்திய அரசின் தேசிய சிறுதொழில் கழகம். பல்வேறு பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டாலும் ஒரு சிலவற்றை இங்கே காணலாம்.

வங்கிக்கடன் பெற...

1) சிறுதொழில் முனைவோர்கள் கடன் பெற தங்கள் கடனுக்கான திட்ட அறிக்கையுடன் தேசிய சிறுதொழில் கழகத்தில் விண்ணபித்து கடன் பெறலாம்.புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர் வங்கிகளில் நேரடியாக சென்று கடன் கேட்டால் சில நேரங்களில் அவர்களுக்கு கடன்நிராகரிக்கப்படுகிறது. அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மற்றும் திட்ட அறிக்கை (புராஜெக்ட் ரிப்போர்ட்) ஆகியவை சரியாக இல்லாததே இதற்குக் காரணம். அவர்கள் தேசிய சிறுதொழில் கழகம் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்தால் அவர்களுடைய ஆவணங்களை சரிபார்த்து வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்க உதவுவார்கள்.

2) புதிதாக தொழில் தொடங்க விரும்பும் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு அவர்கள் தொழில் தொடங்குவதற்கான பதிவு செய்தல், உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்களை வாங்குதல், மூலப் பொருட்களை வாங்குதல் ஆகியவற்றுக்கு தேசிய சிறுதொழில் கழகம் உதவி செய்துவருகிறது.

 3) குறிப்பிட்ட சில அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுடன் சேர்ந்து பணியாற்ற பரிந்துறை ஒப்பந்தம் செய்துள்ளனர். புதிய தொழில் மற்றும் தொழில் விரிவாக்கம் இவற்றிற்கு கடனுதவி பெற நேராக வங்கிகளை அணுகுவதை விட தேசிய சிறுதொழில் கழகத்தை அணுகினால் உங்களுக்கு நிதியுதவி பெற தேவையான முறைகளை விளக்கி தொழில்முனைவோர் தொழில்கடன் பெற ஒரு பாலமாக செயல்படுவார்கள்.

 தொழிற்சாலை தரச் சான்றிதழ்நிறுவனங்கள் தொழில்கடன் பெற வங்கிகளுக்கு விண்ணப்பிக்கும்போது அந்நிறுவனங்களின் தரம் குறித்து வங்கிகள் கேட்கின்றன. அதற்காக அந்நிறுவனங்களை கிரிசல், பிட்ச் போன்ற தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். இவ்வாறு தரச் சான்றிதழ் கோரி குறு, சிறு நிறுவனங்கள் விண்ணப்பிக்கும்போது அதற்கு ஆகும் செலவில் 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இப்படி பெறும் தரச் சான்றிதழ் உங்கள் தொழிற்சாலையின் தரத்தை உறுதிபடுத்தும். இதனால் வங்கிகள் உங்கள் தொழிலின் தரம் கண்டு உடனுக்குடன் வங்கிக் கடன் கொடுக்கும் மற்றும் வட்டி விகிதம் குறைத்து குறைந்த வட்டியில் உங்களுக்கு கடன் வழங்கும். நல்ல தரமுள்ள தொழில்களுக்கு கடன் கொடுப்படுவதால் வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த தரம் பெரும்பாலும் நல்லநிலையில் நடந்துகொண்டு உள்ள குறு மற்றும் சிறுதொழிலுக்கு பொருந்தும் விற்பனை உதவி குறு மற்றும் சிறு தொழில்களில் உற்பத்தியாகும் பொருட்களின் விற்பனையில் தேசிய சிறுதொழில் கழகம் பெரிய அளவில் உதவி செய்கின்றது. உதாரணமாக, மத்திய மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்கள் குறிப்பாக நெய்வேலி அனல்மின் நிறுவனம், பாரத மின்பகு நிறுவனம் போன்ற பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள், மூலப் பொருட்கள் மற்றும் பழுது பார்க்கும் போது உபயோகிக்கும்பொருட்கள் என அனைத்தையும் டெண்டர் மூலமே உறுதி செய்து வாங்குகின்றனர். பார்க்கும்போது உபயோகிக்கும் பொருட்கள் என அனைத்தையும் டெண்டர் மூலமே உறுதிசெய்து வாங்குகின்றனர்.

இதில் குறு மற்றும் சிறு தொழில்கள் தேசிய சிறுதொழில் கழகத்தில் பதிவு செய்யும்போது அவர்களின் தொழிலுக்கு தகுந்தாற்போல இந்த டெண்டர்களில் கலந்துகொள்ளலாம். டெண்டர் பெற முதலில் விண்ணப்பக் கட்டணம் கட்டவேண்டும். இது சில ஆயிரம் ரூபாய் இருக்கும். தேசிய சிறுதொழில் கழகத்தில் பதிவு பெற்ற குறு மற்றும் சிறு தொழிலாக இருப்பின் இலவசமாக விண்ணபிக்கலாம்.

டெண்டர்களைப் பெற விண்ணப்பிக்கும்போது காப்புப் பணமாக (EMD) 10% வரை கட்டவேண்டும். தேசிய சிறுதொழில்
கழகத்தில் பதிவு பெற்றிருந்தால் பதிவில் உங்கள் உற்பத்திப் பொருள் அல்லது சேவை இருப்பின் நீங்கள் முழு விலக்கு பெறுவீர்கள்.
ஒவ்வொரு மத்திய மாநில அரசின் அமைச்சகமும் பொதுத்துறை நிறுவனங்களும் 20% வரை குறு மற்றும் சிறுதொழில் முனைவோரிடமிருந்து கண்டிப்பாக பொருட்கள் வாங்கவேண்டும் அதில் 4% தாழ்த்தப்பட்ட தொழில்முனைவோர்களின் நிறுவனங்களிலிருந்து வாங்கவேண்டும்.

பல்வேறு வகையான 358 பொருட்கள் குறு மற்றும் சிறு தொழில்முனைவோரிடம் மட்டும் வாங்கவேண்டும்.டெண்டர் கொடுக்கும்போது பெரிய நிறுவனங்கள் விற்பனையாளர்களை விட விலை அதிகமானாலும் அது 15% க்கு மிகாமல் இருந்தால் அந்த குறு மற்றும் சிறு நிறுவனத்திற்கு அதிகப்படியான தொகைக்கே டெண்டர் அளிக்க வேண்டும். இந்த அனைத்து உதவிகளையும் பெற நீங்கள் தேசிய சிறுதொழில் கழகத்தில் பதிவு பெற்றவராக இருத்தல் அவசியம்.

வெளி நாடுகள் மற்றும் உள்நாட்டில் கண்காட்சிகளில் பங்கு பெறுதல், சில முக்கிய கண்காட்சிகளில் தேசிய சிறுதொழில் கழகம் பங்கு பெறும் அப்போது குறைந்த வாடகையில் உங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்த இடம் ஒதுக்கும்.

இணையதள போர்ட்டெல் வசதி

புதிய இணையதள சேவையான  B2B வெப் போர்டல் (B2B Web Portal) வசதியையும் நிறுவி உள்ளது தேசிய சிறுதொழில் கழகம். இந்த இணையதளத்தில் விற்பனை மற்றும் வாங்குபவர் முகவரி தேடல் அனைத்தும் உள்ளது. தொழில்முனைவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இவை செய்யும்.
இணைய முகவரி: http://www.msmemart.com , http://www.nsic.co.inதேசிய அளவில் அனைத்துப் பொது நிறுவனங்களுக்கும் தங்கள் தேவைகளை டெண்டர் மூலம் அனுப்பும் அந்த டெண்டர் பற்றிய விவரங்களையும் தேசிய சிறுதொழில் கழகத்துடன் பதிவுபெற்று உடனடியாக தெரிந்துகொள்ளலாம்.

-திருவரசு