வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

* ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்: ரிசர்வ் வங்கி
வேலை: கிரேட் ‘பி’ பதவியிலான அதிகாரி வேலை
காலியிடங்கள்: மொத்தம் 166
கல்வித் தகுதி: பல வேலைகளுக்கு டிகிரியும் சில வேலைகளுக்கு பொருளாதாரம், புள்ளி யலில் முதுகலை முடித்திருக்கவேண்டும்
வயது வரம்பு: 21 முதல் 30 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.7.18
மேலதிக தகவல்களுக்கு www.rbi.org.in

* பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை!

நிறுவனம்: இந்திய ராணுவம்
வேலை: 45வது என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி ஸ்கீம் தேர்வு அடிப்படையில் அதிகாரி வேலை
காலியிடங்கள்: மொத்தம் 55. இதில் ஆண்களுக்கு 50, பெண்களுக்கு 5 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: டிகிரி படிப்பு
வயது வரம்பு: 19 முதல் 25 வரை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 2.8.18
மேலதிக தகவல்களுக்கு www.joinindianarmy.nic.in

* எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு BHEL நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: பி.எச்.இ.எல் என சுருக்கமாக அழைக்கப்படும் பெங்களூரில் உள்ள அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்
வேலை: எஞ்சினியர், சூப்பர்வைசர் மற்றும் மேலும் சில பிரிவுகளின் கீழ் பல வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 74
கல்வித் தகுதி: தொடர்புடைய வேலைத் துறைகளில் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புடன் வேலை அனுபமும் அவசியம்
வயது வரம்பு: 33க்குள்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.7.18
மேலதிக தகவல்களுக்கு www.bhel.com

* 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு BSF-ல் வேலை!

நிறுவனம்: பி.எஸ்.எஃப் எனப்படும் எல்லைக் காவல்படை
வேலை: குரூப் ‘சி’ அடிப்படையில் வாகன மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரிஷியன், டர்னர் உட்பட 11 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 207
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு படிப்புடன் வேலை தொடர்பாக ஐ.டி.ஐ தேர்ச்சி. இத்தோடு 3 வருட அனுபவமும் இந்த வேலை தொடர்பாக இருக்கவேண்டும்
வயது வரம்பு: 18 முதல் 25 வரை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.7.18. மேலதிக தகவல்களுக்கு www.bsf.nic.in

மத்திய அரசின் மருத்துவத் துறையில் மருத்துவ அதிகாரி பணி!

நிறுவனம்: மத்திய அரசின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டிபார்மெண்ட் ஆஃப் ஹெல்த் அண்ட் ஃபேமிலி வெல்ஃபேர் எனும் உடல்நலம் மற்றும் குடும்பநலத் துறை
வேலை: மெடிக்கல் ஆபிசர்ஸ்
காலியிடங்கள்: மொத்தம் 513. அனஸ்தீசியா, ஆப்தால்மாலஜி, சைக்கியாஸ்ட்ரி உட்பட 13 மருத்துவப் பிரிவுகளில் வேலை
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ். தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 37 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.7.2018. மேலதிக தகவல்களுக்கு www.pbhealth.gov.in

திருச்சி என்.ஐ.டி-யில் ஆசிரியர் பணி!

நிறுவனம்: என்.ஐ.டி., திருச்சி
வேலை: பல்வேறு பாடப் பிரிவுகளில் ஆசிரியர் பணி
காலியிடங்கள்: மொத்தம் 97. ஆர்க்கிடெக்சர் பிரிவில் 7, சிவில் எஞ்சினியரிங் 7, கம்ப்யூட்டர் சயின்ஸ் 10, இ.இ.இ.யில் 6, இ.சி.இ.யில் 7, இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்டு கன்ட்ரோல் 4, மெக்கானிக்கில் 8, மெட்டீரியல்ஸ் எஞ்சினியரிங்கில் 5, புரொடக்ஷன் எஞ்சினியரிங்கில் 9, எனர்ஜி அண்டு என்விரான்மென்டல் 2, இயற்பியலில் 3, வேதியியலில் 2, கணிதத்தில் 7, ஹியூமானிட்டீஸ் அண்டு சோசியல் சயின்ஸ் - எகனாமிக்சில் 2, ஆங்கிலத்தில் 5, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்சில் 6, மேனேஜ்மென்ட் ஸ்டடீசில் 7 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: எஞ்சினியரிங் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் உரிய பிரிவில் முதல் வகுப்பில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதல் வகுப்பில் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டம் முடித்திருப்பதோடு பி.எச்டி. படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறிப்பிடவில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 18.7.2018. மேலதிக தகவல்களுக்கு https://recruitment.nitt.edu/tmpfaculty