அடடே...ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

a, an & the  Group IV Part 1


அலுவலகப் பணியில் ஆழ்ந்திருந்த ரகுவின் இருக்கைக்கு வந்த ரவி, “சார், என் கஸின்ஸ் ரெண்டு பேர் TNPSC Group IV எழுதறாங்க சார். அவங்களோட சில சந்தேகங்களை க்ளியர் பண்ணுங்க சார். ‘In the evening a boy was walking towards the sea. The sea was with roaring waves. The boy was surprised to see an old man because the old man was just two feet tall’ என்று ஒரு வாக்கியம் வருது சார்” என்று வாசகத்தைக் காட்டி, “முதல் வாக்கியத்தில் a boyன்னு வந்திருக்கு. ஆனா அடுத்த வாக்கியத்துல the boyன்னு வந்திருக்கு. ஏன் சார்?” என்றபடியே வந்தமர்ந்தான்.

ரவியைப் பார்த்த ரகு, “முன்னப்பின்ன தெரியாததால், ‘ஒரு’ பையன் என்றும் ‘ஒரு’ முதியவர் என்றும் சொல்கிறோம். அவர்கள் அறிமுகமாகிய பின் ‘அந்தப்’ பையன் என்றும் ‘அந்த’ முதியவர் என்றும்தான் சொல்லமுடியும். இங்கு ‘த’ என்றால் ‘அந்த’ என்று பொருள்” என்றார்.
உடனே அருகில் அமர்ந்திருந்த அகிலா ரகுவைப் பார்த்து, “அப்படின்னா ‘த சீ’ (the sea)ன்னு வந்திருக்கே… அப்படின்னா ‘அந்தக் கடல்’ன்னு அர்த்தங்களா சார்?” என்றாள். அப்படியில்ல அகிலா.

‘த’(the) என்ற ஆர்டிக்களை எங்கெங்க போடணும்னு சில விதிமுறைகள் இருக்கு. அதாவது 1) குறிப்பிட்ட அந்த இடத்தில் அவர் ஒருவர்தான் (The Principal), (There will be only one Principal in a school, so ‘the Principal), 2) இனத்திற்கான பொது வார்த்தை (the cow, the lion), 3) இயற்கையின் படைப்புகள் (the universe, the sky, the earth, the world, the sun, the moon), 4) ஆறுகள், (the Ganges, the Cauvery) கடல்கள், (the Arabian sea, the Red sea) சமுத்திரங்கள் (The Indian ocean, the Pacific ocean) கூட்டமைப்புகள் (the USA, the UK, the Maldives, the Andamans 5) மலைத் தொடர்கள் (the Himalayas, the Alps) மதப்புத்தகங்கள் (The Bhagvath Gita, The Quran, The Bible) புகழ்பெற்ற கட்டடங்கள் (The Tajmahal, The Redfort, The White house), 6) அட்ஜெக்டிவ்ஸ் இன் சூப்பர்லேடிவ் டிக்ரி (long-longer-the longest, short-shorter-the shortest), 7) ஆர்டினல் எண்கள் (the first, the second, the third) மற்றும் 8) இடியமடிக் ஃப்ரேஸஸ் (the sooner the better)” என்றார்.

“அப்படின்னா ‘த’ என்ற ஆர்டிக்கிளை எங்கெங்கல்லாம் போடக்கூடாதுன்னும் விதிமுறைகள் இருக்குங்களா சார்?” என்று கேட்டான் ரவி. “Yes of course…” என்றபோது அவரது செல்ஃபோன் ஒலித்தது. ஸ்கிரீனைப் பார்த்த ரகு, “எம்.டீ. கால்ஸ் மீ… சீ யு லெய்டர்” என்றவாறே எழுந்து சென்றார் ரகு.ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com                 

சேலம் ப.சுந்தர்ராஜ்