TNPSC - CCSE IV தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?



வாய்ப்பு

9351 பணியிடங்கள்  


பத்தாம் வகுப்பு படித்தவர்களும்அரசுப் பணியாளர் ஆவதற்கான அரிய வாய்ப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழங்கிவருகிறது. TNPSC என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவ்வாைணயத்தில் Group - IV பிரிவில் தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலப்பதிவேடுகள் சார்நிலைப் பணி  உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள இடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப் படும். அதனாலேயே பல லட்சம் பேர் இப்போட்டித் தேர்வில் பங்குகொள்வார்கள்.

கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வளவு பெரிய காலிப் பணியிடங்களை அதாவது, 9351-பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அளித்திருப்பது தேர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு கட்டாயம் மகிழ்ச்சியளித்திருக்கும். ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு  கடந்த காலங்களில் VAO மற்றும் Group -IV தேர்வுகள் தனித் தனியாகவே நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இந்த ஆண்டு முதல் இரண்டு தேர்வுகளும் தனித்தனியே நடத்து வதற்குப் பல கோடி செலவு ஆகும் என்று கூறி VAO மற்றும் Group -IV தேர்வுகளை ஒருங்கிணைத்து - ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (Combined Civil Services Examination-4 - CCSE IV) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

VAO பகுதியில் கேள்விகள் கேட்கப் படுமா?

*கடந்த ஆண்டுகளில் நடந்ததுபோல் VAO பணியிடங்களுக்கு- கிராம நிர்வாகப்
பகுதியில் 25 கேள்விகள் கேட்கப்படாமல் தற்போது அைவ முழுவதுமாக  ரத்து செய்யப்பட்டுள்ளது.

*Group IV தேர்வில் பழைய நிலையில் கேட்கப்படுவது போலத்தான் தற்போது உள்ளது. எனவே, பயப்படத் தேவையில்லை.

1.மொழிப்பாடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் -100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்)
2.பொது அறிவு - 75 கேள்விகள், அறிவுக் கூர்மை - 25 கேள்விகள். மொத்தம் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) ஒட்டுமொத்தமாக 200 கேள்விகள் கேட்கப்படும்.

இந்த எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே போதும் - நேரடியாகச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அவர்களுக்கு உடனடியாக வேலைக்கான அழைப்புக் கடிதம் வந்துவிடும். இதைப் படித்தவுடன் போட்டியாளர்கள் முகத்தில் நிச்சயம் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியும்.
காலிப் பணியிடங்களின் விவரம் கிராம நிர்வாக அலுவலர்-494, இளநிலை உதவியாளர்-4,301, தட்டச்சர்-3,463, சுருக்கெழுத்து தட்டச்சர்-815,
வரைவாளர் - 156, நில அளவையர் - 74,வரித் தண்டலர் - 48.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே மேலே உள்ள பணியிடங்களுக்கு தகுதியுடையவராக ஆக முடியும்.
வயது வரம்பு: குறைந்த கல்வித்தகுதியை மட்டும் கொண்டவர்களுக்கு பின்வருமாறு...

VAO தேர்வு எழுத 1.7.2017 தேதியின்படி குறும வயது -21 பெரும வயது 40 ஆகும். இதில் BC/MBC/SC/ST அனைவரும் அடங்குவர். மற்றவர்களுக்கு  Other Community குறும வயது 21, பெரும வயது 30 ஆகும்.

இது VAO பணியிடங்களுக்கு மட்டும் பொருந்தும்.Group VI தேர்வுக்கு 1-7-2017 தேதியின்படி 10-ம் வகுப்பு மட்டும் முடித்துள்ளவர்களுக்கு SC/ST ஆதரவற்ற விதவைகளுக்கு குறும வயது 18, பெரும வயது 35-க்குள்  இருக்க வேண்டும். BC/MBC/BCM-க்கு 32-வயதுக்குள் இருக்க வேண்டும். Other Community - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Group VI தேர்வினைப் பொறுத்தவரையில் 10-ம் வகுப்புக்கு மேல் படித்திருந்தால் (BC/MBC/SC/ST-மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு - வயது வரம்பு இல்லை.  தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்ககல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி அதற்குமேல்.

அரசுத் தொழில்நுட்ப தட்டச்சுத் தேர்வில் - தமிழ், ஆங்கிலம் - முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை, ஆங்கிலம் இளநிலை அல்லது ஆங்கிலம் முதுநிலை, தமிழ் இளநிலை - என்ற அடிப்படையில் தேர்ச்சி பெற வேண்டும். அவர்கள் பெற்றுள்ள முதுநிலையின் அடிப்படையில்
முன்னுரிமை வழங்கப்படும்.

சுருக்கெழுத்துத் தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி அதற்குமேல்.

*அரசு நடத்தும் தட்டச்சு மற்றும் சுருக் கெழுத்து தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றால் விண்ணப்பிக்க முடியும். மேலும் தட்டச்சு போல் முதுநிலையின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்
படும்.

முக்கிய நாட்கள் : இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.12.2017, கட்டணம் செலுத்த கடைசி நாள்: 15.12.2017,  எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 11.2.2018, (காலை 10 முதல் 1 மணி வரை)  விண்ணப்பிக்கும் முறை

*நிரந்தரப் பதிவு 1.3.2017 க்கு முன்பு OTP செய்திருந்தால் அதனைக் கொண்டு விண்ணப்பிக்கலாம் - அதன் பின்னர் விண்ணப்பிப்பவர் ரூ. 150- ஐ செலுத்தி நிரந்தரப் பதிவு செய்து பின்னர்தான் விண்ணப்பிக்க முடியும்.

தேர்வுக் கட்டணம் : ரூ.100
இதனைப் பொறுத்தவரை  BC/MBC போன்றவர்கள் சலுகையைப் பயன்படுத்துவதைவிட கட்டணம் செலுத்திவிடுவது நல்லது (SC/ST மற்றும்) சலுகை உள்ளவர்கள் கட்டணம் செலுத்தவேண்டிய அவசியமில்லை.

அன்பு மிக்க மாணவ மாணவிகளே  ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, முன்னரே தெளிவாக விவரங்களைப் படித்து தெரிந்துகொண்டு சரியாக விண்ணப்பிக்கவும். ஏனென்றால், பல பதிவுகளை மாற்றம் செய்யமுடியாது என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். மேலும் தேர்வு என்றைக்கு என்ற அறிவிப்பு வந்தவுடன் காலம் தாழ்த்தாமல் முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாட்களில் விண்ணப்பித்தலை முடிந்தவரை தவிர்க்கவும். ஏனென்றால் பல பேர் ஒரேநாளில் கடைசியில் விண்ணப்பிக்கும்பட்சத்தில் ஆன்லைனில் பல பிரச்னைகள் ஏற்படும். அதனைத் தவிர்த்து இந்த Group IV தேர்வில் முறையாகத் திட்டமிட்டு, கவனமாகப் படித்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

குறிப்பு: இந்தப் பணியிடங்களில் 20% இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியைத் தமிழ்வழியில் பயின்று அதற்குரிய சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.                                         

எஸ்.வடிவேல் M.A., M.S.(IT)