TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்


TNPSC போட்டித் தேர்வுகள் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பலதரப்பட்ட பதவிகளுக்கும் வெவ்வேறு பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இந்த அனைத்துப் போட்டித்தேர்வுகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான பலவிதமான பாடத்திட்டங்களில் இருந்தும் குறிப்புகளை இப்பகுதியில் வழங்கிவருகிறோம். கடந்த சில இதழ்களில் தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு பற்றிய தகவல்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக மேலும் பல பயனுள்ள தகவல்களை இப்போது பார்ப்போம்.

மேல் முறையீடு: உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி முறையீட்டு நீதிமன்றமாகும். மாநில உயர் நீதிமன்ற சிவில், கிரிமினல் தீர்ப்பு களுக்கு எதிராக அரசியல் சட்டச் சிக்கலோ முக்கியமான சட்ட விளக்கமோ தேவையெனில் அத்தகையவை மேல் முறையீடுகள்.

ஆலோசனை: முக்கிய சிக்கல்களில் உச்ச நீதிமன்ற ஆலோசனையை ஜனாதிபதி கேட்கலாம்.
பிற பணிகள்: கீழ் நீதிமன்றங்கள் மேற்பார்வையிடவும் அறிவுரை தரவும் அதிகாரம் கொண்டது.
நீதி மறு ஆய்வு:  சர்ச்சைக்குரிய சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றினால் அவை அரசியல் ஐயங்களுக்கு விளக்கமளித்தல், அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல், அரசியல் சட்டத்திற்கு முரணான சட்டங்களை ரத்து செய்தல்.

தனிப்பட்ட நீதிமன்ற மறு ஆய்வு அதிகாரங்கள்: மத்திய மாநில சிக்கல், அரசியலமைப்புச் சட்டத்தின் ஐயங்களுக்கு விளக்கமளித்தல், அடிப்படை உரிமை களைப் பாதுகாத்தல், அரசியல் சட்டத்திற்கு முரணான சட்டங்களை ரத்து செய்தல்.உச்ச நீதிமன்ற செலவுகள்:  உச்ச நீதிமன்றம் சம்பந்தபட்ட சகல செலவுகளும் (சம்பளம் & பென்ஷன்...) மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) பெறப்படும்.

உயர் நீதிமன்றம்: மாநிலத்தின் தலைமை நீதிமன்றம் உயர் நீதிமன்றம்.
நியமனம்: உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவரும், மாற்றுபவரும் குடியரசுத் தலைவர். நீதிபதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதும் அவரே. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தின்போது அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் அம்மாநில ஆளுநர் ஆகியோரிடமும் கலந்தாலோசிப்பார்.

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை நியமிக்கும் போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடமும் ஆளுநரிடமும் ஆலோசனை பெறுவர்.உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62. Article 222 படி குடியரசுத் தலைவர் இந்தியத் தலைமை நீதிபதி ஆலோசனையுடன் உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யலாம்.

தகுதிகள்

1.இந்தியக் குடிமகன்
2.10 ஆண்டு நீதித்துறையில் தலைமைப் பொறுப்பில் பணி அல்லது 10 ஆண்டு உயர் நீதிமன்ற வழக்குரைஞர்.
3.பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் ஆளுநர்.
பதவி நீக்கம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்றே (நியமனம், மாற்றம், நீக்கம் அனைத்துக்கும் அதிகாரம் ஜனாதிபதி).
பாராளுமன்றம் 2-3 மெஜாரிட்டி மூலம் தீர்மானம் நிறைவேற்றி பின்னரே ஜனாதிபதியால் பதவி நீக்கப்
படுவார்.

உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்கள்

ஒரிஜினல் அதிகாரங்கள்: அடிப்படை  உரிமைகளைப் பற்றிய வழக்குகள், உயில், திருமணம் (ரிட் மனுக்கள்) மணமுறிவு, வணிகக் கம்பெனிச்சட்டம், நீதிமன்ற அவமதிப்பு முதலிய வழக்குகள்.அப்பீல் (மேல் முறையீட்டு) அதிகாரங்கள்: கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் உரிமையியல், குற்றவியல் (சிவில், கிரிமினல்) வழக்குகள் பற்றிய மேல் முறையீடு.இரண்டு மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரு உயர் நீதிமன்றம் இருக்கலாம். ஒரே மாநிலத்தில் உயர் நீதிமன்றக் கிளைகளும் இருக்கலாம்.

செலவுகள்: நீதிபதியின் சம்பளம், பென்சன் முதலியவற்றை நிர்ணயிப்பது பாராளுமன்றம். ஆனால், உயர் நீதிமன்றம் சம்பந்தபட்ட சகல செலவுகளும் (சம்பளம்) மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து தரப்படும். (Consolidated Fund of State)  ஓய்வூதியம் மத்திய கூட்டு நிதியிலிருந்து தரப்படும். (Consolidated Fund of India).

நிர்வாக அதிகாரம்: மாவட்ட நீதிமன்றங்களை மேற்பார்வையிடுதல், மாவட்டங்களிடையே வழக்குகளை மாற்றுதல்.கீழ்நிலை நீதிமன்றங்கள், தன்னாட்சி அமைப்புகள் அவற்றின் அதிகாரங்கள் பற்றியெல்லாம் அடுத்த இதழில் பார்ப்போம்.

கடந்த இதழில் ஜனாதிபதி, ஆளுநர், அவர்களுக்கான பணிகள், உச்சநீதிமன்ற செயல்பாடுகள் பற்றியெல்லாம் பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக மேலும் சில தகவல்களைப் பார்ப்போம்.