வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலை வாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

விமானப்படை ஆணையத்தில் வேலை!

நிறுவனம்: ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் இந்திய விமானப்படையின் ஆணையம், கொல்கத்தா கிளைவேலை: தீயணைப்புப் பிரிவில் ஜூனியர் அசிஸ்டென்ட் பதவியிலான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 105. இதில் பொதுப் பிரிவினர் 56, ஓ.பி.சி 19, எஸ்.சி 13 மற்றும் எஸ்.டி.க்கு 17 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் அல்லது தீயணைப்பு தொடர்பாக டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: 18 - 30. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.7.17
மேலதிக தகவல்களுக்கு: www.aai.aero

இந்திய ராணுவத்தில் தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு!

நிறுவனம்: இந்திய ராணுவம் தமிழகத்தின் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான ராணுவப் படைப்பிரிவுக்கான ஆட்சேர்ப்புக்கு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம்
வேலை: படைவீரர், டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர், பொதுப்பணி, கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் போன்ற பணிகள் இதில் உள்ளன
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி: +2 படிப்புடன் தொழிற்கல்வி பயின்றவர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, +2 தேர்ச்சி, ஐ.டி.ஐ படிப்பு மற்றும் டிகிரி படித்தவர்களும் வேலைக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 17½ முதல் 23 வரை
தேர்வு முறை: கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவுத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 3.8.17
மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்ஸ் பணி!

நிறுவனம்: மத்திய அரசின் அகில இந்திய மருத்துவமனை மற்றும் மருத்துவ அறிவியல் ஆய்வு மையமான எய்ம்ஸ் மருத்துவமனை, ராய்ப்பூர் கிளை
வேலை: ஸ்டாஃப் நர்ஸ்
காலியிடங்கள்: மொத்தம் 550. இதில் கிரேடு 1ல் 75 இடங்களும், கிரேடு 2ல் 475 பணியிடங்களும் உள்ளன
கல்வித்தகுதி: பி.எஸ்சி நர்சிங் படித்தவர்கள் அல்லது நர்ஸ் படிப்பில் 2 வருட சான்றிதழ் படிப்புடன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 21-35. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க
கடைசித் தேதி: 31.7.17
மேலதிக தகவல்
களுக்கு: www.aiimsraipur.edu.in

ராணுவ தளவாட தொழிற்சாலையில் வேலை

நிறுவனம்: ஆர்டினன்ஸ் ஃபேக்டரி எனப்படும் ராணுவ தளவாட தொழிற்சாலை, மெடாக் கிளை
வேலை: எஞ்சினியரிங் மற்றும் டெக்னிக்கல் பிரிவில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 100.
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு டிகிரியும் இரண்டாம் வேலைக்கு டிப்ளமோ படிப்பும் அவசியம்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.7.17 அன்று நேரடியான நேர்முகத் தேர்வு மூலம் இந்த வேலைகள் வழங்கப்படும். ஆகையால் இந்தத் தேதியில் விண்ணப்பதாரர்கள் ஆஜராக வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு: www.ofmedak.gov.in

8-வது படிப்புக்கு ஃபுட் கார்ப்பரேஷனில் வேலை

நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கர்நாடகா கிளை
வேலை: வாட்ச்மேன்
காலியிடங்கள்: மொத்தம் 117
கல்வித்தகுதி: 8-வது படிப்பு
வயது வரம்பு: 18-25
தேர்வு முறை: எழுத்து மற்றும் உடல் தகுதி
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.7.17(இந்த நிறுவனத்தின் தமிழ்நாடு கிளையிலும் 55 காலியிடங்கள் இருக்கின்றன. ஆனால் இதற்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி 7.8.17. (மேலுள்ள தகுதிகள்தான் இந்த வேலைகளுக்கும் அவசியம்)
மேலதிக தகவல்களுக்கு: www.fci.gov.in

விளையாட்டு வீரர்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை!

நிறுவனம்: சஷாஸ்த்ர சீமாபல்(எஸ்.எஸ்.பி) எனப்படும் மத்திய அரசின் கீழ் வரும் எல்லைப் பாதுகாப்புப் படை
வேலை: விளையாட்டு கோட்டா அடிப்படையில் வேலை. கால்பந்து, வாலிபால், அத்லட்டிக் உட்பட 22 விளையாட்டுகளில் உலகளாவிய, தேசிய போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: மொத்தம் 355
கல்வித்தகுதி: 10வது படிப்பு
வயது வரம்பு: 18-23
தேர்வு முறை: எழுத்து மற்றும் உடல் தகுதி
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.7.17
மேலதிக தகவல்களுக்கு: www.ssb.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்