காலணி வடிவமைப்பு படிக்க விருப்பமா?



AIST 2015 (All India Selection Test) தேர்வுக்கு தயாராகுங்க!

எக்காலமும் வேலைவாய்ப்பு மிகுந்த துறைகளில் ஒன்று, காலணி வடிவமைப்புத் துறை. இத்துறை நிபுணர்களுக்கு உலகெங்கும் ஏக வரவேற்பு. சுயதொழில் செய்தும் பெரும் பொருள் ஈட்ட முடிந்த துறைகளில் இதுவும் ஒன்று. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Footwear Design - Development Institute (FDDI) இந்தியாவின் மிகச்சிறந்த காலணி வடிவமைப்பு பயிற்சி நிலையமாகும்.

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தக் கல்வி நிறுவனம், நொய்டா, சென்னை, கொல்கத்தா, ஹரியானாவில் உள்ள ரோடக், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர், உ.பி.யில் உள்ள பர்சட்கன்ஜ், ம.பி.யில் உள்ள சிந்த்வாரா மற்றும் குனா போன்ற இடங்களில் பயிற்சி மையங்களைக் கொண்டு செயல்படுகிறது. இந்த மையங்களில் காலணி வடிவமைப்பு சார்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது இந்த நிறுவனம்.

ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மற்றும் தொடர்புகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், சர்வதேச அளவிலான பாடத் திட்டங்களை மாணவர்களுக்கு வழங்குகிறது.

இந்நிறுவனத்தில் உள்ள துறைகள்

ஃபுட்வேர் டிசைன் மற்றும் புரொடக்ஷன்
ரீடெயில் மற்றும் ஃபேஷன் மெர்சன்டைஸ்
ஃபேஷன் லெதர் ஆக்ஸசரி டிசைன்
ஃபேஷன் டிசைன்
பிசினஸ் மற்றும் எண்டர்பிரனர்ஷிப்
ஃபுட்வேர் டிசைன் மற்றும் புரொடக்ஷன்
கிரியேட்டிவ் டிசைன்

இந்நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள் மற்றும் மொத்த இடங்கள்

B.Des ஃபுட்வேர் சைன் மற்றும் புரொடக்ஷன்    420
B.Des ஃபேஷன் லெதர் அக்ஸசரிடிசைனிங்    120
B.Des ஃபுட்வேர் டிசைனிங்    330
B.Des ஃபுட்வேர் மெர்சன்டைஸ்    300
M.B.A ரீடெயில் மற்றும் ஃபேஷன்    240
M.B.A ஃபுட்வேர் டிசைன்    210
கிரியேட்டிவ் டிசைன் (CAD/CAM)    30

சென்னையில், இருங்காட்டுக்கோட்டையில் இந்த கல்வி நிறுவனம் செயல்படுகிறது. Flat No. E1, 7th Main Road, SIPCOT Industrial Park, Irunkattukottai,  Kancheepuram District, (04449049607,  09381923811, 0938039936) என்ற முகவரியில் செயல்படும் இந்த மையத்தில் Fashion Merchandising and Retail Management (30 seats), Footwear designing and Production Management (30 Seats), Fashion Designing (60 Seats) ஆகிய இளங்கலைப் படிப்புகளும் Fashion Merchandising and Retail Management (30 seats), Footwear designing and Production Management (30 Seats) ஆகிய முதுகலைப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

யாரெல்லாம் இப்படிப்புகளில் சேரமுடியும்...?

+2வில் எந்தப் பிரிவைப் படித்து தேர்ச்சி பெற்றவர்களும் இளங்கலை மற்றும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளில் சேரலாம். இளங்கலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.மொத்த இடங்களில் 15% ஸ்பான்சர் செய்யும் தொழிற்சாலைகளுக்கும், 15% ஆதி திராவிடர்களுக்கும், 7.5% மலைவாழ் மக்களுக்கும், 27%  பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், 3% மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்படும்.

எந்த அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது?

அகில இந்திய அளவில் நடைபெறும் AIST (All India Selection Test) என்ற நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆன்லைன் வழியில் நடக்கும் இந்தத் தேர்வு ஜூன் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 13, 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறும். வகுப்புகள் ஆகஸ்டில் துவங்கும்.

இளநிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 45 மதிப்பெண்களுக்கான கேள்விகளும், பொது அறிவியலில் 30 மதிப்பெண்களுக்கான கேள்விகளும், ஆங்கிலத்தில் 45 மதிப்பெண்களுக்கான கேள்விகளும், பொது அறிவில் 30 மதிப்பெண்களுக்கான கேள்விகளும் கேட்கப்படும்.   இந்த நுழைவுத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் திஞிஞிமி வளாக அலுவலகங்களில் 500 ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ‘திஞிஞிமி, ழிமீஷ் ஞிமீறீலீவீ’ என்ற பெயரில் 500 ரூபாய்க்கு ஞிஞி அனுப்பியும் விண்ணப்பம் பெறலாம். www.fddiindia.com என்ற இணைய தளத்தில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.5.2015.

தொடர்புக்கு:
Footwear Design -  Development Institute,
A  10 / A, Sector  24 , NOIDA - 201 301, 
Gautam Budha Nagar, Uttar Pradesh, INDIA ,
Tel: 01204500100 email: contact@fddiindia.com,
Web : www.fddiindia.com

தமிழக முகவரி:
Footwear Design - Development Institute, Flat No. E1, 7Th Main Road, Sipcot Industrial Park, Irunkattukottai,  Kancheepuram District,
Ph: 04449049607,  09381923811, 0938039936 

  - வெ.நீலகண்டன்