கேம்பஸ் நியூஸ்



சட்டப் படிப்புக்கு அதிக இடங்கள்!

சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப் படிப்புகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.புதிதாக இரண்டு 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளையும் 2015-2016ம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் காரணமாக இங்கு இளநிலைப் படிப்புகளில் இப்போது இருந்துவரும் 320 இடங்கள் 660 என உயரும்.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ள அறிவிப்பில், ‘பி.எல். (ஹானர்ஸ்) படிப்பு இடங்கள் 80லிருந்து 120 ஆகவும், பி.ஏ. - எல்.எல்.பி. படிப்பில் இருந்த 160 இடங்கள் 180 ஆகவும், பி.காம். - எல்.எல்.பி. படிப்பில் இருந்த 80 இடங்கள் 120 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. வரும் 2015-2016ம் கல்வியாண்டு கலந்தாய்வில் இந்தக் கூடுதல் இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக பி.சி.ஏ. - எல்.எல்.பி., பி.பி.ஏ. - எல்.எல்.பி. என்ற இரண்டு புதிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. தலா 120 இடங்களைக் கொண்ட இந்தப் படிப்புகளிலும், 2015-2016ம் கல்வியாண்டுக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலையில் முதுகலைப் படிப்புகள்

டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. மாணவர்கள் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். 2015-2016ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைப் பதிவு ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும். கலை, அறிவியல், சமூக அறிவியல், மானுடவியல், வர்த்தகம் மற்றும் வணிகவியல் படிப்பு களுக்கும், பண்பாட்டு அறிவியல், சட்டம், இசை, மற்றும் நுண்கலை, கணித அறிவியல் ஆகிய முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஷ்ஷ்ஷ்.பீu.ணீநீ.வீஸீ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கடல்சார் பல்கலையில் சேர தேதி நீட்டிப்பு


மே 9ல் பொது நுழைவுத்தேர்வு சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திலும், மும்பை, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள அதன் வளாகங்களிலும் பி.எஸ்சி (நாட்டிக்கல் சயின்ஸ்), டிப்ளமோ நாட்டிக்கல் சயின்ஸ், பி.எஸ்சி (கப்பல் கட்டுதல்), பி.டெக். (மரைன் எஞ்சினியரிங்) எம்.டெக். எம்.பிஏ (துறைமுகம் மற்றும் கப்பல் மேலாண்மை) உள்பட பல்வேறு கடல்சார் தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு மே மாதம் 9ம் தேதி சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஏப்ரல் 6ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் வசதிக்காக விண்ணப்பிக்கும் கடைசித் தேதியை ஏப்ரல் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

கல்வித் தகுதி: டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு களுக்கு +2 மாணவர்களும், முதுநிலைப் படிப்புகளுக்கு பட்டதாரிகளும் பொது நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விரிவான தகவல்களுக்கு www.imu.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

NIPER-ல் உயர்கல்வி


நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பார்மசூடிகல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (NIPER) கல்வி நிறுவனத்தில், முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வழங்கப்படும் படிப்புகள்:
M.S. (Pharm.), M.Pharm., M.Tech. (Pharm.), M.B.A. (Pharm.) and Ph.D. போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, NIPER Joint Entrance Examination என்ற பெயரில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இது ஒரு மத்திய அரசு கல்வி நிறுவனமாகும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: விண்ணப்பங்களை மே 1 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: www.niper.gov.in.

டாடா மெமோரியல் உதவித்தொகை


டாடா மெமோரியல் டிரஸ்ட் வழங்கும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் கல்வி உதவித்தொகைக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. பிஹெச்.டி. ஆய்வு மேற்கொள்வதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அடிப்படை கல்வித் தகுதி: அப்ளைட் பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், பயோ பிசிக்ஸ், பயோ டெக்னாலஜி, லைப்ஃப் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் முதுநிலைப் படிப்பு.

உதவித்தொகையின் அளவு: ஒவ்வொரு மாதமும் 16,000 ரூபாய் வழங்கப்படும்.

கடைசி தேதி: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 20 கடைசி தேதி.
 
மேலும் விரிவான தகவல்களுக்கு: www.actrec.gov.in