எல்லைக்காவல் படையில் 346 பேருக்கு வேலை



விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் எல்லைக்காவல் படையில் 346 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் (பி.எஸ்.எப்.) எனப்படும் எல்லைக் காவல் படை, இந்திய துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்று. இந்த படைப்பிரிவில் விளையாட்டு வீரர்களுக்கான 2015-2016 ஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கான்ஸ்டபிள் தரத்திலான இந்தப் பணியிடங்களில் ஆண்-பெண் இருபாலருக்கும் வாய்ப்புகள் உள்ளன. மொத்தம் 346 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆண்கள் 241 பேரும், பெண்கள் 105 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள்:
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.8.2015 தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டுத் தகுதி: தடகளம், வில் வித்தை, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், நீண்டதூர ஓட்டம், ஜூடோ, நீச்சல், வாட்டர்போலோ, படகுப் போட்டி, துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல், மல்யுத்தம் மற்றும் குழு விளையாட்டுகளான கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, பூப்பந்து, கபடி, போலோ போன்ற விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த விளையாட்டுகளில் மாநில அளவு, தேசிய அளவு, சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டவராக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் சாதித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உடல் தகுதி: ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 170 சென்டிமீட்டர் உயரமும், 80-85 செ.மீ. மார்பளவும் கொண்டிருக்க வேண்டும், பெண்கள் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். உயரம் மற்றும் வயதிற்கேற்ற எடை அளவு சோதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, விளையாட்டுத்திறன் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து, The Comandant, 25 Bn BSF, Chawla Camp, Post Office Najafgarh, New Delhi, Pincode 110071 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.இதற்கான அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு, 6.4.2015ல் வெளியாகி உள்ளது.விண்ணப்பங்களைப் பதிவிறக்கவும், கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் www.bsf.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

தென்மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி


தென்மேற்கு ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள Trade Apprentice பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 379

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Fitter  176
2. Mechanist  15
3. Turner  20
4. Welder  87
5. Electrician  25
6. Ref A/C Mechanic  15

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 24.04.2015 தேதியின்படி 15-24க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தென்மேற்கு ரயில்வேயின் www.swr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Office of the Workshop Personnel Officer,Carriage Repair Workshop, South Western Railway,Gadag Road, Hubli  58 020 (Karnataka)பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2015

எய்ம்ஸில் செவிலியர் பணி!

441 பேருக்கு வாய்ப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 441 Staff Nurse பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 441 (OBC: 112, SC: 69, ST: 31, UR: 229)

பணி: Staff Nurse

சம்பள விவரம்: மாதம் ரூ.9,300 - 34,800 +

தர ஊதியம் ரூ.4,600

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கும் ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimspatna.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.04.2015