பயிர் பெருக்கவியல் படித்தால் பாரெல்லாம் வேலை



வேளாண்மை முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களின் தன்மையை மேம்படுத்த உதவும், பயன்பாட்டுத் தாவரவியல் துறையின் ஒரு பிரிவே பயிர் பெருக்கவியல் (Plant breeding). இந்தியாவில் சுமார் 60% பேர் விவசாயத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்கிறார்கள். தற்போது உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றிருந்தபோதிலும், இனிவரும் காலங்களில் தேவை அதிகரிக்கும்போது அதனை ஈடுகட்டும் வகையில் தானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

அதற்கு உதவும் இன்றியமையாத அறிவியல் துறையாக இருப்பது பயிர் பெருக்கவியலாகும். இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், கல்வி வாய்ப்புகள், இத்துறையில் சாதித்த அறிஞர்கள், இத்துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள், இத்துறை மாணவர்களை ஊக்குவிக்கும் அமைப்புகள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

‘‘உணவின்றி எந்தவொரு உயிரினமும் உயிர் வாழ முடியாது. தற்போதுள்ள உணவுப் பயிர் வகைகளை மேம்படச் செய்வதன் மூலம் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க முடியும். அதற்கு பயிர் பெருக்க வியல் துறை சார்ந்த ஆய்வுகள் மிகவும் இன்றியமையாதவை. பயிர் பெருக்கவியலால் நேர்ந்த முன்னேற்றமே பசுமைப் புரட்சி. இன்னும் இத்துறையில் தேவை அதிகமிருக்கிறது. வேலைவாய்ப்புகள் ஏராளம் உருவாகிக் கொண்டுள்ளன. உலகெங்கும் இத்துறை வல்லுனர்களுக்கான தேவை இருக்கிறது. எனவே மாணவர்கள் இத்துறையை தாராளமாகத் தேர்வு செய்து படிக்கலாம். பயிர் பெருக்கவியல் சார்ந்த படிப்புகள்/ பிரிவுகள்

* Mutation breeding  - சடுதி மாற்ற பெருக்கம்
* Hibridization - கலப்பினமாக்கல்
* Plant introduction - பயிர் அறிமுகம்
* Resistance breeding - எதிர்ப்புப் பயிர் பெருக்கம்
* Plant Genetics - தாவர மரபியல்
* Seed testing - விதைச் சோதனை
* Selection - தேர்வு செய்தல்
* Heterosis - கலப்பின வீரியம்
* Economic Botany பொருளாதார தாவரவியல்
* Mass Selection- கூட்டுத் தேர்வு.

 இந்தப் பிரிவுகளில் படிக்கலாம்பி.எஸ்சி. தாவரவியல், பி.எஸ்சி. அக்ரிகல்ச்சர் ஆகிய படிப்புகளில் பயிர் பெருக்கவியல் ஒரு பாடமாக இடம்பெற்றுள்ளது. இதுதவிர இந்தியாவில் இளங்கலையில் இந்தப் படிப்பு இல்லை. ஒருங்கிணைந்த விஷி படிப்பாக சில கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இங்கு M.Sc., M.Phil.,  D.Phil., Ph.D., D.Sc. போன்ற படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.
பயிர் பெருக்கவியல் துறைகளைக் கொண்ட இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் சில...

*ஆனந்த் அக்ரிகல்ச்சுரல் யுனிவர்சிட்டி, குஜராத்
*தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை
*கேரளா அக்ரிகல்ச்சுரல்  யுனிவர்சிட்டி, கேரளா
*ஒரிசா யுனிவர்சிட்டி ஆஃப் அக்ரிகல்ச்சர் அண்ட் டெக்னாலஜி, ஒடிஷா
*பஞ்சாப் அக்ரிகல்ச்சுரல் யுனிவர்சிட்டி, பஞ்சாப்
*சென்ட்ரல் அக்ரிகல்ச்சர் யுனிவர்சிட்டி, மணிப்பூர்
*சௌத்ரி சரண்சிங் ஹரியானா அக்ரிகல்ச்சுரல் யுனிவர்சிட்டி, ஹரியானா
*ஜுனாகத் அக்ரிகல்ச்சுரல் யுனிவர்சிட்டி, குஜராத்
*இந்திராகாந்தி KS விஸ்வ வித்யாலயா, சட்டீஸ்கர்
*ஜவஹர்லால் நேரு ‚KS விஸ்வ வித்யாலயா, மத்தியப்பிரதேசம்

 பயிர் பெருக்கவியல் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் உலகின் சிறந்த ஆய்வு
நிறுவனங்களுள் சில...

*நெவாடா யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.unr.edu)
*யுனிவர்சிட்டி ஆஃப் அர்கன்சாஸ், அமெரிக்கா.(www.uark.edu)
*யுனிவர்சிட்டி ஆஃப் நியூ இங்கிலாந்து, ஆஸ்திரேலியா (www.une.edu.au)
*யுனிவர்சிட்டி ஆஃப் ஃபுளோரிடா, அமெரிக்கா (www.ufl.edu)
*ஆபர்ன் யுனிவர்சிட்டி, அலபாமா, அமெரிக்கா (www.ag.auburn.edu)
*லிங்கன் யுனிவர்சிட்டி, மலேசியா (www.lincoln.edu.my)
*குயின்ஸ்லாந்து யுனிவர்சிட்டி, ஆஸ்திரேலியா (www.uq.edu.au)
*ஓரிகான் ஸ்டேட் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.oregonstate.edu)
*சார்லஸ் ஸ்டர்ட் யுனிவர்சிட்டி, ஆஸ்திரேலியா(www.csu.edu.au)
*யுனிவர்சிட்டி ஆஃப் விஸ்கான்சின், மேடிசன், அமெரிக்கா (www.wisc.edu)

(வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிப்பது இப்போது சுலபமாகி விட்டது. கூடுதலான வங்கிக்கடன்கள் கிடைக்கின்றன)
இந்தியாவின் புகழ்பெற்ற பயிர் பெருக்கவியல் துறை வல்லுனர்கள் சிலர்...

*பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன்
*பேராசிரியர் எஸ்.கே.கம்ரா
*பேராசிரியர் பி.பி.பால்
*பேராசிரியர் எம்.சிமாக்
*பேராசிரியர் அமீர் சிங்
*பேராசிரியர் ஜே.இ.டக்ளஸ்
*பேராசிரியர் ஏ.பி.ஜோஷி
*பேராசிரியர் எல்.வி.பார்த்தசாரதி
*பேராசிரியர் என்.பி.தேஷ்பாண்டே
*பேராசிரியர் பி.எல்.கோச்சார்

உலக அளவில் புகழ் பெற்ற பயிர்பெருக்கவியல் துறை வல்லுனர்களுள் சிலர்...

*பேராசிரியர் ஹெச்.கே.ஹேயஸ்
*பேராசிரியர் எப்.ஆர்.இம்மெர்
*பேராசிரியர் டி.சி.ஸ்மித்
*பேராசிரியர் ஜே.எம்.போஹ்ல்மென்
*பேராசிரியர் ஜி.எல்.ஸ்டெப்பின்ஸ்
*பேராசிரியர் ஆர்.டபிள்யூ. அல்லார்டு
*பேராசிரியர் எம்.என்.ப்ரிக்ஸ்
*பேராசிரியர் பி.எப்.க்னோவ்லெஸ்
*பேராசிரியர் ஆர்.எச்.ரிச்சாரியா
*பேராசிரியர் சி.டி.டார்லிங்டன்

பயிர் பெருக்கவியல் துறை மாணவர்களை ஊக்கப்படுத்தவும் ஆய்வுகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரவும் உருவாக்கப்பட்ட குழுக்கள் / அமைப்புகள் சில...

* இண்டியன் சொசைட்டி ஆஃப் ஜெனிடிக்ஸ் அண்ட் ப்ளான்ட் ப்ரீடிங்
* நேஷனல் அசோசியேஷன் ஆஃப் ப்ளான்ட் ப்ரீடர்ஸ், அமெரிக்கா
* தி நேஷனல் அகாடமி ஆஃப் அக்ரிகல்ச்சுரல் சயின்சஸ், இந்தியா
* ப்ளான்ட் ப்ரீடிங் அகாடமி, கலிபோர்னியா
* ஆப்ரிக்கன் ப்ளான்ட் ப்ரீடிங் அகாடமி, தென் ஆப்ரிக்கா
* ஹங்கேரியன் அகாடமி ஆஃப் சயின்சஸ், ஹங்கேரி
* தி அமெரிக்கன் சீட் ட்ரேட் அசோசியேசன், அமெரிக்கா
* ப்ளான்ட் ப்ரீடிங் அகாடமி, நைரோபி
* க்ளோபல் ப்ளான்ட் கவுன்சில், அமெரிக்கா
* அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ப்ளான்ட் பயாலஜிஸ்ட்ஸ், அமெரிக்கா

 பயிர் பெருக்கவியல் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள்/ பதக்கங்கள் / விருதுகள் சில...

*யங் சயின்டிஸ்ட் அவார்ட், இண்டியன் சயின்ஸ் காங்கிரஸ் அசோசியேஷன், கல்கத்தா
*ஜேக்கப் எரிக்சன் பரிசு, அமெரிக்கா
*மார்ஸ்டென் மெடல், இங்கிலாந்து
*தி எல்லீன் ப்ளான்ட் மெமோரியல் விருது, அமெரிக்கா
*எட்ஜ்வொர்த் டேவிட் மெடல், அமெரிக்கா
*மார்ட்டின் கிப்ஸ் மெடல், அமெரிக்கா
*ஸ்டீபன் ஹேல்ஸ் அவார்ட், அமெரிக்கா
*வோல்ப் ப்ரைஸ், அமெரிக்கா
*தி வேர்ல்டு ஃபுட் பிரைஸ், அமெரிக்கா
*தி நேஷனல் அகாடெமி ஆஃப் அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ் அவார்ட், இந்தியா

பயிர் பெருக்கவியல் துறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் அமைப்புகள்/ நிறுவனங்கள் சில...

*மினிஸ்ட்ரி ஆஃப் அக்ரிகல்ச்சர், இந்திய அரசு
*அக்ரிகல்ச்சுரல் சயின்டிஸ்ட் ரெக்ரூட்மென்ட் போர்டு, புதுடெல்லி
*எம்.எஸ்.சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷன், சென்னை
*மகாராஷ்டிரா ஹைப்ரிட் சீட் கம்பெனி, மகாராஷ்டிரா
*சதர்ன் பெட்ரோலியம் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பொரேஷன், தூத்துக்குடி
*ஐ.டி.சி. லிமிடெட், கொல்கத்தா
*பயிர் பெருக்கவியல் துறை சார்ந்த ஆய்வு மற்றும் கல்வி நிறுவனங்கள்
*யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், புதுடெல்லி
*மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள்
*டிபார்ட்மெண்ட் ஆஃப் பயோடெக்னாலஜி, புதுடெல்லி

அடுத்த இதழில்
‘நீர் உயிர் வளர்ப்பியல்’ (Aqua culture)
- வெ.நீலகண்டன்