Jokes
ஸ்பீக்கரு...
‘‘ஒரே ராத்திரியில ஏன் ரெண்டு கடைகள்ல கொள்ளை அடிச்சே..?’’ ‘‘என்ன பண்றது எஜமான்..? எனக்கு ரெண்டு சம்சாரம் ஆச்சே!’’ - அ.ரியாஸ் அகமது, சேலம்.
‘‘மேடையில சேர்ல உட்கார்ந்துக்கிட்டு தூங்காதீங்க தலைவரே...’’ ‘‘ஏன்யா..?’’ ‘‘நீங்க நாற்காலி கனவு காண்றதா எல்லாரும் சொல்றாங்க!’’ - கே.ஆனந்தன், பே.தாதம்பட்டி.
‘‘நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு செருப்புகள் விழாத காரணத்தினால், தலைவரை மீண்டும் பேச அழைக்கிறோம்..!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘நம்ம படம் ரிலீசான நாலு நாள்ல நாற்பது கோடியைத் தாண்டிடுச்சு சார்...’’ ‘‘நிஜமாவாய்யா சொல்றே... அவ்வளவு வசூலா?’’ ‘‘நினைப்புதான்... ஃபேஸ்புக், ட்விட்டர்ல நம்ம படத்தை திட்டுனவங்களோட எண்ணிக்கையைச் சொன்னேன்!’’ - கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.
‘‘மப்புல உளர்றாரு தலைவர்...’’ ‘‘எப்படிச் சொல்ற..?’’ ‘‘தொகுதிவாழ் மருமக்களேங்கறாரு..!’’ - சி.சாமிநாதன், கோயமுத்தூர்.
‘‘தலைவர் காரசார விவாதத்தை ஏன் தவிர்க்கறாரு..?’’ ‘‘அவருக்கு அல்சர் பிரச்னையாம்... அதான்!’’ - பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் திறமையான இசையமைப்பாளராக இருந்தாலும் அவராலே ஹெல்‘மெட்டில்’ ட்யூன் போட முடியாது! - எந்த மெட்டுக்கும் ட்யூன் போடும் இசைமேதைகள் சங்கம் - கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
|