Jokes



ஸ்பீக்கரு...

‘‘தலைவர் கிட்ட வாட்ஸ்அப் நம்பர் கேட்டேன்...’’
‘‘என்ன சொன்னாரு..?’’
‘‘அவர்கிட்ட எந்த ஜெயில் வார்டன் நம்பரும் இல்லைன்னு சொல்லிட்டாரு..!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

வீட்டுல மாடு வளர்த்தா குளிப்பாட்டறாங்க; நாய் வளர்த்தா குளிப்பாட்டறாங்க; பூனை வளர்த்தா குளிப்பாட்டறாங்க; மீன் வளர்த்தா குளிப்பாட்டுவாங்களா?
- தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே குளிப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘எதிர்க்கட்சிக்காரர்களின் முகத்திரையைக் கிழிப்பேன்...’’
‘‘வழக்கமா நமக்கு எதிர்கோஷ்டிக்காரன் வேஷ்டியை கிழிச்சுதானே தலைவரே பழக்கம்?’’
- கே.ஆனந்தன், பே.தாதம்பட்டி.



‘‘பலத்த போலீஸ் பாதுகாப்பு வேணும்னு தலைவர் கேக்குறாரே... எங்க போகப் போறாராம்?’’
‘‘எம்.எல்.ஏ. பதவி ஏத்த பிறகு இன்னிக்குத்தான் தொகுதி பக்கம் போகப் போறாராம்!’’
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.


‘‘கண் ஆபரேஷன் முடிஞ்சு கண் திறக்கும்போது யார் முகத்தைப் பாக்க ஆசைப்படறீங்க? உங்க அம்மா முகத்தையா... இல்ல, உங்க மனைவி முகத்தையா?’’
‘‘ஏன் டாக்டர்? என் மனைவி வேலைக்காரியை வேலையை விட்டு நிறுத்திட்டாளா என்ன!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘தலைவர் ஏன் மேடையிலே பயந்துக்கிட்டே பேசறார்?’’
‘‘யாரோ அவர் மேலே இன்னிக்கு ‘செருப்பு வெடிகுண்டு’ வீசப்போறதா தகவல் கிடைச்சுதாம்..!’’
- மு.மதிவாணன், அரூர்.

தத்துவம் மச்சி தத்துவம்


பர்பியை சாப்பிடலாம்... குல்ஃபியை சாப்பிடலாம்... செல்ஃபியை சாப்பிட முடியுமா?
- மச்சினியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து மனைவியிடம் மாத்து வாங்குவோர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.