ஜோக்ஸ்
தத்துவம் மச்சி தத்துவம்
பேய் படத்துக்கு போடுற மியூசிக்கையும் பேக்கிரவுண்ட் மியூசிக்னுதான் சொல்லுவாங்களே தவிர, ‘பேய் கிரவுண்ட்’ மியூசிக்னு சொல்ல மாட்டாங்க... - பேக்கிரவுண்ட் மியூசிக்கோடு தத்துவம் சொல்லி பேயையே விரட்டுவோர் சங்கம் - கா.பசும்பொன், மதுரை.
‘‘போலீஸ் ஸ்டேஷனுக்கா சார் போன் பண்றீங்க?’’ ‘‘ஆமா...’’ ‘‘எங்கேஜ்டு சவுண்டு கேட்டிருக்குமே... வரும்போது நான்தான் ரிசீவரை எடுத்து கீழே வச்சிட்டு வந்தேன்!’’ - வி.ரேவதி, சீர்காழி.
‘‘படம் முழுக்க ஹீரோ ஏன் ஒரு டெம்போவுல சுத்திக்கிட்டு இருக்கார்?’’ ‘‘நீங்கதானே சார், கதையில ஒரு ‘டெம்போ’ இருக்கணும்னு சொன்னீங்க!’’ - நா.கி.பிரசாத், கோவை.
‘‘தலைவர்கிட்ட உண்மை அறியும் சோதனையை எப்படி நடத்தினாங்க?’’ ‘‘கொஞ்சம் காஸ்ட்லி சரக்கு வாங்கிக் கொடுத்ததும் போதையில உண்மைய உளறிட்டாராம்!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘அஞ்சாத சிங்கமே, புறநானூற்றுப் புலியே, அடங்காத சிறுத்தையேன்னு நம்ம தலைவருக்கு அடைமொழி வச்சது தப்பா போச்சுங்கறியே... ஏன்?’’ ‘‘அவருக்கு ‘கால்நடை டாக்டர்’ பட்டம் குடுத்துட்டாங்க..!’’ - டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
‘‘ஒன்பது மணிக்கு நர்ஸ் பின்னாடி நடந்து ஆஸ்பத்திரிக்கு வர்றீங்க. சாயங்காலம் நர்ஸ் டூட்டி முடிஞ்சு கிளம்புனதும் அவங்க பின்னாடி கிளம்பிடுறீங்களே... ஏன்?’’ ‘‘நீங்கதானே டாக்டர் ‘காலை, மாலை இரண்டு வேளையும் வாக்கிங் போகணும்’னு சொன்னீங்க?’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
ஸ்பீக்கரு...
‘‘சென்ற இரண்டு தேர்தல்களிலும் தலைவருக்குக் கூட்டணியில் ஒரு இடம்கூட தராமல் ஏமாற்றியது போல், 2016 தேர்தலிலும் செய்து அவரை ‘ஹாட்ரிக்’ சாதனை புரிய வைக்க வேண்டாம் என...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
|