ஜோக்ஸ்



‘‘கபாலி மனசாட்சிக்கு ரொம்ப பயந்தவன் சார்...’’
‘‘எப்படிச் சொல்றீங்க ஏட்டய்யா?’’
‘‘திருடணும்னு எண்ணம் மனசில வந்தாக்கூட மாமூல் குடுத்துட்டு போறானே..!’’
- மு.மதிவாணன், அரூர்.

‘‘புலவரை ஏன் கைது செய் கிறார்கள்?’’
‘‘மக்களின் மன்னரே’ன்னு பாட்டு பாடினாராம்!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

என்னதான் சிறைச்சாலையில் பல ரூம்கள் காலியா இருந்தாலும்,
அதுல எல்லாம் ‘டு லெட்’ போர்டு போட முடியாது!
- வாடகைப் பணம் வாங்க அலையாய் அலைவோர் சங்கம்
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக ரெண்டு ஷாப்பிங் மால், மூணு கல்யாண மண்டபம், முப்பது ஆம்னி பஸ்களை தலைவர் வாங்கியதற்காக, ‘ஊழல் செய்து சம்பாதித்து விட்டார்’ என்று எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் வாய் கூசாமல் கூறும் எதிர்க்கட்சியினரை வன்மையாகக் கண்டிக்கிறோம்...’’
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.

‘‘ஆகவே... சிந்தித்து வாக்களியுங்கள்!’’
‘‘சிந்திச்சா கண்டிப்பா உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டாங்க தலைவரே!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘ஏன்டி இப்படி ஒரே
சமயத்துல
நாலு பேர லவ் பண்றே..?’’
‘‘இதயத்துல நாலு
அறைகள் இருக்கிறதா என்னோட ஃபேமிலி டாக்டர்
சொன்னாரு...’’
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.

‘‘மாப்பிள்ளை பேங்க்ல வேலை செய்யலாம்... அதுக்காக
இப்படியா?’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘சீர்வரிசையில ஏ.டி.எம்
மெஷின் வேணும்னு கேட்கிறாரே..!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.