சுடிதார் இப்ப இங்கிலீஷ் ஆகிடுச்சு!
அடிக்கடி அப்டேட் பண்ணிக்கொள்வதால்தான் வளர்ந்துகொண்டே இருக்கிறது ஆங்கிலம். அந்த ஆங்கிலத்தின் அடிப்படைகளைக் கற்க விரும்பும் உலக மக்கள் எல்லோருக்கும் ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியைத் தெரியும்.
வருஷத்துக்கு மூன்று தடவை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தனது இந்தப் பேரகராதியில் புதுப்புது சொற்களைச் சேர்க்கும். இந்த முறை இளசுகள் உலகின் கோட்வேர்ட்ஸ் எல்லாத்தையும் கொக்கி போட்டு இழுத்து உள்ளே சேர்த்துவிட்டார்கள். மொத்தம் சேர்க்கப்பட்டுள்ள 500 வார்த்தைகளில் சில ஜாலி சாம்பிள்ஸ் இங்கே...
Sexting எஸ்.எம்.எஸ். போல எழுத்து மூலமாக தகவல் பரிமாறிக்கொள்வதை Texting என்பார்கள். அதுவே கொஞ்சம் கிளுகிளுவாகி புளூ புளூவாகப் போய்விட்டால், அதுதான் இது.
photobombing ‘ரெடி, ஸ்டெடி, ஸ்மைல்’ என பில்டப் எல்லாம் கொடுத்து யாரையாவது போட்டோ எடுக்கும்போது, சரியாக பிற நண்பர்கள் ஃப்ரேமுக்குள் குதித்து கலாய்ப்பதுதான் ஃபோட்டோபாம். அதாவது அந்த போட்டோவுக்கு வேட்டு வைத்து அதைக் கெடுப்பது.
மேட் இன் இந்தியா
நம்ம தலைவர்தான் அடிக்கடி உலக டூர் அடிக்கிறார்ல. அவர்கிட்ட பேசவாச்சும் உலக மக்கள் இந்திய வார்த்தைகளைத் தெரிஞ்சிக்க வேண்டாமா? அதான் இதையெல்லாம் சேர்த்திருக்காங்க போல! churidar - அட, நம்ம சுடிதார்தாங்க! Arre Yaar - ‘அட நண்பா’ என பொருள் தரும் இந்தி வார்த்தை bhelpuri - குட்டி பூரியோடு மசாலா, பொரி, மிக்சர் சேர்த்து தரப்படும் சாட் உணவு dhaba - ரோட்டோர சாப்பாட்டுக்கடை
Internaut இன்டர்நெட்டில் இறக்கிவிட்டால் ரைட் புகுந்து லெஃப்ட் வரும் டெக் ஆசாமிகள் இப்படித்தான் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.
kryptonite சூப்பர்மேன் காமிக்ஸில் அவன் சக்திகள் அனைத்தையும் செயல் இழக்க வைக்கும் வேற்று கிரக மினரலுக்கு இந்தப் பெயர். ஸோ, ஒருவரின் வீக்னஸை இந்தப் பெயரால் குறிப்பிடுகிறார்கள். உ-ம்: ‘‘நம்ம கில்மானந்தாவுக்கு பொண்ணுங்கன்னா ஒரு kryptonite’’
crowdfunding ‘நான் படம் எடுக்கப் போறேன்... உங்களால முடிஞ்ச பங்களிப்பை செய்யுங்க’ என ஃபேஸ்புக்கில் பேங்க் அக்கவுன்ட் நம்பரைப் போடுவது இன்றைய டிரெண்ட். அதற்குத்தான் இந்தப் பெயர்!
twerk டான்ஸ்தான்... ஆனால், கொஞ்சம் செக்ஸி லுக்கில் மிக்ஸியாகச் சுழன்றால் அதற்கு இந்தப் பெயர். சுருக்கமாக ஐட்டம் டான்ஸ்!
லேட்... லேட்டஸ்ட்!
‘உள்ளூர் உள்ளான் சுள்ளான் எல்லாம் பேசித் திரியுது... இதையெல்லாம் இப்பத்தான் சேர்க்குறாய்ங்களா’ என மெர்சல் ஆக்குகின்றன சில வார்த்தைகள். netbook - இணையப் பயன்பாட்டுக்கு மட்டுமான செயல் திறன் குறைந்த லேப்டாப் tweeting - ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவை இடுவது thumb drive- பெரிதாக இருந்த பென் டிரைவ் தோற்றம் சுருங்கி மாற்றம் பெற்ற பெயர் H2O - தண்ணீர்தான் வார்த்தை. இது தண்ணீருக்கான கெமிக்கல் ஃபார்முலாவாக இருந்தது. இனி இதுவும் ஓர் வார்த்தை!
இமெயில் மாதிரி மின்னணு மூலம் இயங்கும் எல்லாப் பொருட்களுக்கும் இணைய செயல்பாடுகளுக்கும் ‘இ’ என்ற முன்னொட்டு சேர்ப்பது வழக்கம். அப்படி சில ‘இ’ பொருட்கள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. e-cigarette - எலக்ட்ரானிக் சிகரெட் e-edition - பத்திரிகைகளின் இணையப் பதிப்பு e-toll - இணைய வழியிலான கட்டண அனுமதி
மிதக்கிற தாமரை?
இனிமே இ தான்!
FLOTUS - மிதக்கிற தாமரையைத்தான் இப்படிச் சொல்வார்களோ என நமக்கு சந்தேகம் வரும். ஆனால், அமெரிக்கவாசிகளுக்கு இது மிச்செல்லி ஒபாமாவைக் குறிக்கும். நாட்டின் ஜனாதிபதி முதல் குடிமகன் என்றால், அவர் மனைவி முதல் குடிமகள் அல்லவா? First Lady of the United States என்பதன் சுருக்கம்தான் இது. இந்தச் சொல்லோடு, Supreme Court of the United States என்பதன் சுருக்கமான SCOTUS என்ற சொல்லும் இப்போது அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது!
- நவநீதன்
|