ஜோக்ஸ்
‘‘இண்டர்வியூல ரொம்ப கஷ்டமான கேள்வியைக் கேட்டுட்டாங்க...’’ ‘‘என்ன கேட்டாங்க?’’‘‘பிரதமர் நரேந்திர மோடி இப்போ எந்த நாட்டுல இருக்கார்னு கேட்டாங்க...’’ - சரவணன், கொளக்குடி.
‘‘மன அமைதிக்காக அந்தப் பெண் சாமியாரை அடிக்கடி போய் பார்த்தியே... பலன் கிடைச்சுதா?’’ ‘‘கெடைச்சது... சீக்கிரமே அவங்க எனக்கு மாமியார் ஆகப் போறாங்க!’’ - கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.
‘‘டாக்டர் ஏன் தலைதெறிக்க ஓடி வர்றாரு..?’’ ‘‘பேஷன்ட் அவருக்கு ஆபரேஷன் பண்றதா சொன்னாராம்..!’’ - தென்றல் நாசர், சங்ககிரி.
என்னதான் ஒருத்தர் சவுண்ட் பார்ட்டியா இருந்தாலும், தேசிய கீதம் போடும்போது சத்தம் போடாம இருந்துதான் ஆகணும்! - சவுண்டான தத்துவங்களை ரவுண்டு கட்டி கூறுவோர் சங்கம் - கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.
‘‘கூட்டத்துக்கு வர்றதுக்கு எத்தனை பேருக்கு காசு கொடுத்திருக்கோம்னு தலைவர்கிட்ட கணக்கு கரெக்டா சொன்னது தப்பா போச்சா... ஏன்?’’ ‘‘இங்கு கூடியிருக்கும் 1,131 தொண்டர்களேன்னு புள்ளிவிவரத்தோட பேச ஆரம்பிச்சிட்டார்!’’ - மு.மதிவாணன், அரூர்.
என்னதான் அனுபவமே சிறந்த பாடம்னாலும், அதையெல்லாம் பரீட்சைக்கு மனப்பாடம் பண்ண வேண்டியதில்லை! - மனப்பாடம் பண்ண பயந்தே, பாதியில் கல்வியை விட்டோர் சங்கம் - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘பைக்ல போய் ஆக்சிடென்ட் ஆகிற மாதிரி கனவு வருது டாக்டர்!’’ ‘‘மறக்காம ஹெல்மெட் போட்டுக்கிட்டு படுங்க!’’ - அ.ரியாஸ், சேலம்.
|