ஐந்தும் மூன்றும் ஒன்பது...
மர்மத் தொடர் 27
‘‘பொதுவாக என் போன்ற ஆய்வாளர்களின் தேடல்கள் பெரும்பாலும் சலிப்பூட்டுபவை! அதே சமயம் சில நேரங்களில் மிக பரபரப்பாய் ஏதாவது தெரிய வந்து, அவ்வளவு நாள் சலிப்பையும் ஒன்றுமில்லாதபடி செய்துவிடும்.
இந்த உலகில் எவ்வளவோ விதமான பணிகள். இதில் காலத்ேதாடு தொடர்புடையதைத் தேடும் எங்கள் பணி மிக விசித்திரமானது. எங்களால் நேரடியாக இந்த சமுதாயத்துக்கு ஒரு பயனும் இல்லை. ஆனால் மறைமுகமாக மிகவே பயன் உண்டு.எனது இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமும், என் அனுபவங்களைக் கூறுவதற்கேயாகும்.
என் போன்றவர்களின் பணிக்கு அபூர்வமாகவே மனிதர்கள் வருவர். பெரிதாய் எந்த இலக்கும் இல்லாத பணி, என் பணி. இத்தனை நாட்களுக்குள் இவ்வளவு தூரம் தோண்டி, இவ்வளவு சிலைகளையோ... இல்லை, புதைந்து போய்விட்ட ஏதோ ஒரு சுண்ணாம்பு டப்பாவையோ கண்டுபிடிக்க வேண்டும் என்று எங்களுக்கு இலக்கு எதையும் யாரும் நிர்ணயிப்பதில்லை. பல நேரங்களில் மனது ‘வெட்டி வேலை’ பார்ப்பதாக எண்ணிக்கொண்டு, ‘இதெல்லாம் ஒரு வேலை’ என்று புத்தியை ஏளனம் செய்யும். அது அவ்வளவையும், அபூர்வமாய் கிடைக்கும் ஒரு விஷயம் மாற்றிவிடும்.
கஞ்சமலை சித்தர் பாட்டின்மூலம், அங்கே தங்கம் இருப்பது தெரிந்த நிலையில் நாங்கள் அவ்வளவு பேருமே ‘இது எந்த அளவு உண்மை’ என்றும், ‘இருந்தால் அதை எப்படி எடுக்க முடியும்’ என்றும் எங்களுக்குள் விவாதித்தோம்.தங்கம் ஒரு விசித்திரமான உலோகம். இந்த உலகில் நீரும் நெருப்பும் அனைத்தையும் விழுங்கி விடும். இவற்றின் விளைவால் சர்வமும் உருமாறி குணம் மாறிப் போய்விடும். இவற்றிற்கு நடுவே துளியும் உருமாறாத, குணம் மாறாத தன்மை தங்கத்துக்கு மட்டும்தான் உண்டு. அதனாலேயே ஜாதி, இனம், மொழி கடந்து உலகின் பொதுப் பணமாகவே இது ஆகிவிட்டது.
இலக்கியம், புராணம், இதிகாசம் என்று சகலத்திலும் தங்கத்துக்கு ஒரு தனி இடம். எவ்வளவுதான் சட்டம் போட்டாலும் இதைத் திருடுவதும், கடத்துவதும் துளியும் குறையவில்லை. அப்படிப்பட்ட தங்கம், இரும்புக் கனிமவளம் மிகுந்த கஞ்சமலையின் ஒரு பகுதியில் நிறைய இருக்கிறது என்கிற தகவலை ஒரு கற்பனையாகக் கருத எங்களால் முடியவில்லை. இம்மாதிரி விஷயங்களில் மாநில அரசை விட மத்திய அரசுக்குத்தான் சக்தியும் உரிமையும் அதிகம். எனவே மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லத் தீர்மானித்தோம்.’’
- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து... வர்ஷன் விக்கித்த கையோடு தடுமாறவும் செய்தான். ‘‘என்னடா... பதிலே காணோம்.’’ - அந்த இரவில் ப்ரியா அவனைத் தூண்டினாள். ‘‘என்னத்த சொல்ல... நீ நிஜமாதான் சொல்றியா?’’
‘‘இது ரொம்பவே வழக்கமான கேள்விடா... நீ மட்டும் இப்ப இங்க இருந்தா தெரியும்.’’‘‘ப்ரியா... நான் ஆவி பத்தி யாராவது என்கிட்ட பேசினா ‘இட்லி குக்கர் ஆவியதான் நான் பாத்துருக்கேன்’னு கிண்டல் பண்றவன்... உனக்கும் தெரியும்!’’‘‘இதோ பார்... எந்த அப்பாடக்கருக்கும் அசலான அனுபவம்தான் மாஸ்டர். நான் இப்ப அனுபவப்பட்டுக்கிட்டேதான் உன்கூட பேசிக்கிட்டிருக்கேன். இன் ஃபாக்ட், உன்கூட பேசறது தான் எனக்கு இப்ப ஒரு தைரியம்னு கூட சொல்வேன்... நான் இப்ப உன்கூட பேசறத முத்தழகுவோட ஆவியும் பாத்துக்கிட்டேதான் இருக்கு...’’ ‘‘என்ன சொல்றே நீ... அது எப்படி இருக்கு?’’
‘‘எப்படி இருக்குன்னா... நாம கண்மூடி இருக்கும்போது நம்மைச் சுத்தி யாராவது நடந்துக்கிட்டேயிருந்தா நாம அதை எப்படி உணர்வோம்?’’ ‘‘அப்ப விசிபிளா பாக்கற மாதிரி தெரியலையா?’’ ‘‘ஒரு நிழலைப் பாக்கற மாதிரி இருக்கு...’ ’‘‘செல்போன்ல படம் எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்ப முடியுமா?’’
‘‘ஐ வில் ட்ரை...’’ ‘‘நானும் வெயிட் பண்றேன்...’’ - வர்ஷன் கட் செய்தான். பின் நகம் கடிக்க ஆரம்பித்தான். பாலோடு வந்தாள் அனுஷா. ‘‘என்ன?’’ ‘‘பால்...’’
‘‘வெச்சுட்டுப் போ...’’ ‘‘ஏன்... தூக்கம் வரலையா?’’ ‘‘அஃப்கோர்ஸ்... பலவிதமான எண்ணங்கள்! நீ போய்த் தூங்கு...’’ ‘‘எனக்கு மட்டும் எப்படி வரும்?’’
‘‘வீட்ல அப்பா, அம்மாகிட்ட எதையும் சொல்லிடலையே?’’ ‘‘இல்ல... ஆனா நீ கொஞ்ச நாளாவே சரியில்லங்கற எண்ணம் அவங்களுக்கு வந்தாச்சு.’’ ‘‘அதுக்கு என்ன பண்றது... வினோதமான சிக்கல் இல்ல வந்துருக்கு...’’
‘‘ஒரு காலப்பலகணி... அதுக்கான குறிப்புகள்... அதைத் தொட்டாலே மரணம்... ஹாலிவுட் ஃபான்டசி மூவி மாதிரியே இருக்கு!’’ ‘‘கூடுதலா இப்ப ஒரு சிக்கல் அனு...’’ ‘‘என்ன அது?’’ ‘‘ப்ரியாவோட தாத்தா காணாமப் போயிட்டார்.’’ ‘‘வாட்?’’ ‘‘அவரைக் காணோம்னு சொன்னேன்...’’
‘‘காணாமப் போக அவர் என்ன சின்னக் குழந்தையா? இல்ல, நம்ம ஊர்லதான் திருவிழா ஏதாவது நடக்குதா?’’ ‘‘அனுஷா... இங்க நம்ம அபார்ட்மென்ட்லயும் என்னை குளோஸா ஒருத்தன் வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கான்...’’ ‘‘என்ன வர்ஷன், ஒவ்வொண்ணா சொல்றே?’’
‘‘ஒண்ணும் புரியல. பெரியவரை கடத்திட்டாங்களா... இல்ல, அவர் காலப்பலகணியை தேடி சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டாரான்னு எதுவும் தெரியல.’’ ‘‘அவர் கிளம்பணும்னா குறிப்புகள் வேணுமே?’’ ‘‘அதெல்லாம் மனுஷன் எமன். அந்தப் பெட்டில இருக்கற சுவடிகளை போட்டோ எடுக்க எவ்வளவு நேரம் ஆகிடப் போகுது?’’
‘‘யு மீன்?’’ ‘‘அவர் ப்ரியாவோட அம்மா பத்மாசினியை சமாதானப்படுத்தறதுக்குத்தான் பெட்டிய தூக்கிக் கொடுத்தார். மற்றபடி அதுக்குள்ள இருக்கற கிரிஸ்டல் பெண்டுலம், திசைமானி, சோழி இதெல்லாம் வெளில நம்மால வாங்க முடிஞ்ச அயிட்டங்கள்தான். ஒருவேளை அதெல்லாம் கூட அவர் இப்ப வாங்கி பெட்டிக்குள்ள வச்ச அயிட்டங்களாவும் இருக்கலாம்!’’
‘‘தெளிவா சொல்லு... பெரியவர் அப்ப எல்லாரையும் ஏமாத்திட்டாரா?’’ ‘‘இருக்கலாம்... அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கு. இடையில முத்தழகுவும் ஏதோ சேட்டை செய்துருக்கா. இப்ப ஆவியா வேற அலையத் தொடங்கி யிருக்கா...’’ ‘‘வர்ஷண்ணா...’’ - பதறினாள் அனுஷா.
‘‘பயப்படாதே... எது நடந்ததோ, நடந்துக்கிட்டும் இருக்கோ, அதைத்தான் நான் சொல்லிக்கிட்டும் இருக்கேன்.’’ ‘‘இது எதையுமே சட்டுன்னு நம்ப முடியலையே?’’ ‘‘அப்ப மெல்ல நிதானமா நம்பு... ப்ரியா வாட்ஸ் அப்ல ஆவி படத்த அனுப்பறதா சொல்லி யிருக்கா!’’
- சொல்லும்போதே அவன் செல்ேபானில் சிணுங்கல்... வாட்ஸ் அப்பிலும் நான்கைந்து படங்கள். ஆட்காட்டி விரல் நுனி படவும், எலெக்ட்ரான் வட்டம் உருவாகத் தொடங்கி தட்டாமாலை சுற்றியது.‘‘இது ஒரு இம்சை... எவ்வளவு ஜி.பிய ஃபில் பண்ணாலும் அவ்வளவும் காலியாயிடும்...’’ என்று அவன் முணுமுணுக்க, புகைப்படமும் தெரிய ஆரம்பித்தது. படத்தில் தெளிவில்லை - கறுப்பாய் கசகசவென்று வீடியோ ஃபார்மில் ஒலியோடு சேர்த்து அது காட்சியாக விரிந்தது. அதனிடமிருந்து விசித்திர சப்தங்கள்.வர்ஷன் உன்னிப்பாய் பார்த்த நொடி, அருகாமை கடிகாரம் நள்ளிரவு பன்னிரெண்டுக்கான ஒலிகளை சிதறவிடத் தொடங்கியது. ‘‘வர்ஷா இது...’’
‘‘இதான் முத்தழகுவோட ஆவி... வாய்சும் அவளோடது தான்...’’ ‘‘அப்ப ஆவிங்கறதெல்லாம் உண்மையா?’’‘‘அனு... பேசினது ேபாதும். இப்ப எனக்கு எல்லாத்தையும் மறந்து தூங்கணும்னு தோணுது. ெபாழுது விடியட்டும்... நிறையவே வேலை இருக்கு!’’- அவன் பேச்சோடு கப் போர்ட் ட்ராயரைத் திறந்து ஒரு குவார்ட்டர் பாட்டிலை எடுத்தான். ‘‘டாஸ்மாக் சரக்கா?’’
‘‘ஆமாம். வர்ற வழில வாங்கினேன். இது இல்லன்னா இப்ப சுத்தமா தூக்கம் வராது. பாவம் ப்ரியா... அங்க அவளை இந்த முத்தழகுவோட ஆத்மா என்ன பாடு படுத்தப் போகுதோ?’’- கேட்டபடி குடித்தான். பக்கத்தில் டம்ளரில் பால் ஆடையால் போர்த்திக் கொண்டு விட்டிருந்தது. ‘‘பாலைக் குடிக்காம இதைக் குடிக்கறியே...’’
‘‘நான் கொஞ்சமாவது தூங்கணும். நாளைக்கு நிறைய வேலை இருக்கு.’’ - அவன் சொல்லும்போதே ப்ரியா திரும்ப கூப்பிட்டாள். ‘‘என்ன பாத்தியா?’’
‘‘பாத்தேன்... அந்த வாய்ஸ் உன்னோடது இல்லையே?’’ ‘‘வர்ஷன்... இன்னுமா சந்தேகம் உனக்கு?’’ ‘‘ஐ ஆம் சாரி... நாம வாழ்ந்துக்கிட்டிருக்கற வாழ்க்கை முறை அப்படி... இப்ப பேசிக்கிட்டிருக்கறதே செல்போன்ங்கற விஞ்ஞான சாதனத்தாலதான்... ஆனா பேசற விஷயம்?’’
- அவன் வார்த்தைகளை மென்று விழுங்கினான்.‘‘வர்ஷா... இங்க எதுவும் பிரமை இல்லை. நான் ஃபீல் பண்றதைத்தான் பேசறேன். இந்தப் பலகணி விஷயத்துல நம்ம அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நிச்சயமா இருக்குடா.’’‘‘ஐ அக்ரி... காலைல பொழுது விடியட்டும். நான் நேர்ல வரேன். நாம ஒரு சரியான முடிவை இந்த விஷயத்துல எடுத்தே தீரணும். நீ தனியா இருக்காதே. உன் அப்பா ரூமுக்குப் போயிடு.’’
‘‘எனக்கும் இப்ப அதுதான் ஒரே வழி. முத்தழகு ஏதோ சொல்ல வர்ற மாதிரியும் இருக்கு. இன்னிக்கு சிவராத்திரிதான்...’’ - ப்ரியா ஒரு மாதிரி முடித்துக்கொண்டாள். வர்ஷனும் செல்லைத் தூக்கி எறிந்தவனாக கட்டிலில் விழுந்தான். அனுஷா மெல்ல விலகத் தொடங்கினாள். ப்ரியாவும் போனைக் கீழே வைத்தவளாக எதிரில் அறைக் கதவையே பார்த்தாள். அங்குள்ள திரைச்சீலைதான் ஒரு ஒழுங்கின்றி ஆடியபடி இருந்தது. கதவும் முன்பின் முன்பின் என்று, முறை வைத்து ஒரு ஒழுங்கில் ஆடியது. அந்தக் கதவைக் கடந்தே அவள் வெளியே சென்றாக வேண்டும்.
அங்கேதான் முத்தழகுவின் ஆவி நின்றபடி இருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அவ்வப்போது பார்த்த ஆங்கிலப் படங்கள் எல்லாம் நினைவுக்கு வரத் தொடங்கின. அந்தப் படங்களில் பார்த்த, ஆவிகள் உடம்பைப் பற்றத் துடிக்கும் காட்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. இங்கே முத்தழகுவும் தன்னைப் பிடித்து தன்னுள் புகுந்து விடுவாளோ என்று தோன்றியது. காதோரமாக வியர்வைக் கோடு உருவாகி நீண்டபடியே இருந்தது. பளிச்சென்று மனதுக்குள் வள்ளுவர் நினைவு வந்தது. கீழே வைத்த போனை எடுத்து அவரை அழைத்தாள்.
நள்ளிரவில் ஒலித்த வள்ளுவரின் கைபேசி முதல் முறை நீண்டு ஒலித்து அடங்கியது. திரும்பத் தொடர்பு கொண்டாள். இம்முறை முடியும் எல்லையில் ‘‘சொல்லும்மா ப்ரியா... ஏதாவது பிரச்னையா?’’ - என்கிற கேள்வியோடு வள்ளுவர் பேசினார். ‘‘அய்யா... சாரிய்யா... தொந்தரவு பண்ணிட்டேன்.’’
‘‘பதற்றப்படாதே... என்ன விஷயம்?’’‘‘அய்யா! இப்ப என் முன்னால அந்த முத்தழகுவோட ஆவி நின்னுக்கிட்டு இருக்குய்யா...’’ ‘‘அப்படியா... இதை நான் எதிர்பார்த்தேன். பயப்படாதே! கோயில்ல மோட்ச தீபம் போடப் போட அணைஞ்சுக்கிட்டே இருந்தது. அப்பவே எனக்குப் புரிஞ்சு போச்சு.’’‘‘இப்ப நான் என்ன செய்யட்டும்..? எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.’’
‘‘பயப்படாதே... அது உன்னைப் பிடிக்க முடிஞ்சிருந்தா எப்பவோ பிடிச்சிருக்கும். உன் உடம்புல அதுக்கான அமைப்பு இல்ல. உனக்கு இப்ப நல்ல தசாபுக்தி நடந்துக்கிட்டும் இருக்கணும். உனக்கு சஷ்டி கவசம் தெரியுமா?’’‘‘அய்யோ... அதெல்லாம் எதுவும் தெரியாதே?’’
‘‘சரி... நான் சொல்றேன். ஸ்பீக்கர் போன்ல போடு. அப்படியே அதுகிட்ட போ. அது நிச்சயம் என் குரல் கேட்டு ஓடிடும்...’’ ‘‘ஓடிடுமா?’’‘‘நீ ஸ்பீக்கரை போடு, சொல்றேன்.’’
‘‘சஷ்டி கவசத்துக்கு அவ்வளவு பவரா?’’‘‘பின்ன என்னம்மா... சும்மா லொடலொடன்னு சத்தம் போடற சினிமா பாட்டுன்னு நினைச்சியாக்கும். உனக்கு விளக்கம் தர எனக்கு இப்ப நேரமில்லை. நான் சொல்றேன் - நீ தைரியமா போ - சத்தியமா உனக்கு எதுவும் ஆகாது. காலைல நான் வரேன். நாம நேர்ல பேசுவோம்’’ என்ற வள்ளுவர், கவசத்தின் நடுவில் உள்ள வரிகளான,
‘வல்லபூதம் வலாஷ்டிகப் பேய்கள்...’ என்கிற வரியிலிருந்து தொடங்கினார். ப்ரியாவும் கதவு நோக்கி மெல்ல நடந்தாள். ஆடியபடி இருந்த கதவும் சட்டென நின்றது. திரைச்சீலையும் அடங்கியது... வெளியே நாய் குரைக்கும் சப்தம் கேட்கத் தொடங்கியது...
உன்கூட பேசறது தான் எனக்கு இப்ப ஒரு தைரியம். நான் இப்ப போன்ல பேசறத முத்தழகுவோட ஆவியும் பாத்துக்கிட்டேதான் இருக்கு!’’
‘‘ஆனாலும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு அளவே இல்லாமப் போச்சு...’’ ‘‘ஏன்... என்னாச்சு?’’‘‘நாங்கள் ஆட்சி க்கு வந்தால் ஓசோன் படலத்துல இருக்கற ஓட்டையை அடைப் போம்ங்கறாங்க!’’
‘‘அவரு ரிலீஸ் தேதியை அறிவிச்சிட்டுத்தான்...’’ ‘‘படம் எடுப்பாரா?’’ ‘‘நீ வேற! திருடவே போவாரு...’’ - சுப.தனபாலன், முத்துப்பேட்டை.
‘‘மகன்னு சொல்றீங்க... அப்புறம் தூரத்துச் சொந்தம்னு சொன்னா எப்படிங்க..?’’ ‘‘அவன் ஆஸ்திரேலியாவில இருக்கானே!’’
- தொடரும்...
இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்
|