ஜோக்ஸ்



‘‘இந்தக் காயம் எப்படி ஏற்பட்டது?’’
‘‘தப்பிச்சு ஓடறப்ப சார்...’’
‘‘எங்க இருந்து?’’
‘‘ஆபரேஷன் தியேட்டர்ல இருந்துதான்..!’’
- சுப.தனபாலன்,
முத்துப்பேட்டை.

‘‘நம்ம கட்சியில ஏதாவது மாற்றம் தெரியுதா?’’
‘‘நல்லா தெரியுது
தலைவரே! முன்னே கட்சியை விட்டு ஒவ்வொருத்தரா போயிட்டு இருந்தாங்க.
இப்ப கும்பல் கும்பலா
கிளம்பிட்டு இருக்காங்க...’’
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.

‘‘அங்க என்ன கூட்டம்?’’
‘‘தலைவர் மேல செருப்பு வீச டோக்கன் தர்றாங்களாம்..!’’
- அ.ரியாஸ், சேலம்.

ரெண்டு பிளேயர்கள் செஸ் விளையாடும்போது தவறுதலா ‘செக்’ வைத்துவிட்டால், அதையெல்லாம் ‘செக் மோசடி’ன்னு சொல்ல முடியாது!
- ஜி.தாரணி, மதுரை.

‘‘இவன் பேட்டை ரவுடி யோட பையன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க..?’’
‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’
- பர்வீன் யூனுஸ்,ஈரோடு.

என்னதான் ஒரு திரைப்படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதா இருந்தாலும், அதையும் தியேட்டர்ல ரீல் ரீலாதான் ஓட்டணும். ரியலா ஓட்ட முடியாது
- ஆபரேட்டராக இருந்து அவஸ்தைப்படுவோர் சங்கம்
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘தலைவரே! உங்களுக்குக் கோயில் கட்டணும்னு தொண்டர்கள் பேசிக்கறாங்க...’’
‘‘எதுக்குய்யா..?’’
‘‘அப்பதான் உங்களுக்கு அர்ச்சனை பண்ணலாமாம்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.