ஜோக்ஸ்



‘‘அந்த பௌலர் அம்பயர்கிட்ட ‘வந்தாகணும்’னு திருப்பித் திருப்பி சொல்லிக்கிட்டு இருக்காரே... என்ன, நியூ பால் கேக்கறாரா?’’
‘‘ம்ஹும்... டிரிங்ஸோட டாஸ்மாக் சரக்கு வந்தாகணும்னு சொல்லிக்கிட்டு இருக்கார்!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

தத்துவம் மச்சி தத்துவம்

பேருந்து
நிலையத்துக்கு லேட்டா போனா பேருந்து போயிடும்; ரயில் நிலையத்துக்கு லேட்டா போனா ரயில் போயிடும்;
விமான நிலையத்துக்கு லேட்டா போனா விமானம் போயிடும். அழகு நிலையத்துக்கு லேட்டா போனா அழகு
போயிடுமா?
- நிலையாக நிலைத்து நின்று தத்துவம் யோசிப்போர் சங்கம்
- ஜி.தாரணி, மதுரை.

‘‘நொண்டிச் சாக்கு சொல்றதுல நம்ம தலைவர் கில்லாடி...’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘ஊழலுக்கு எதிரா குரல் கொடுக்கச் சொன்னா, ‘தொண்டை
கட்டிக்கிட்டு இருக்கு’ன்னு சொல்றாரு!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘உங்க கதையில நல்ல மெஸேஜ் இல்லையே..?’’
‘‘என் செல்போன்ல நிறைய இருக்கு சார்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘எதிரி மன்னனுக்கு
கட்டுப்பட்டு வாழா விட்டால்...’’
‘‘என்ன ஆகும்
அமைச்சரே..?’’
‘‘கட்டுப்போட்டு வாழ
வேண்டியிருக்கும்..!’’
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.

‘‘பௌலிங் போடற நம்ம தலைவர்
அரசியல் நாகரிகம் தெரிஞ்சவர்...’’
‘‘அதுக்காக ஒவ்வொரு பந்து வீசுறதுக்கு முன்பும், மரியாதை நிமித்தமா பேட்ஸ்
மேனை சந்திச்சுப் பேசறது ரொம்ப ஓவர்!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

என்னதான் ஓட்டப்
பந்தயத்துல பதக்கம் வாங்கி சாதனைக்கு மேல
சாதனையா படைச்சாலும், வாக்கிங்னு வந்துட்டா நடந்துதான் தீரணும்!
- வம்புக்கு வழி தேடுவோர் சங்கம்
- ஆர்.சீதாராமன், சீர்காழி.