ஜோக்ஸ்



இளம் வெயிலை ‘ஊமை’ வெயில்னு சொல்லறோம்; அதே மாதிரி கொளுத்தும் வெயிலை ‘பேசும்’ வெயில்னு சொல்றதில்லையே... ஏன்?
- வெயில் போய் மழை வந்ததால் ஜில்லென்று யோசிப்போர் சங்கம்

‘‘டாக்டர்! செத்து செத்துப் பிழைக்கிற மாதிரி அடிக்கடி கனவு வருது...’’
‘‘ஆபரேஷனுக்கு சம்மதிக்காத வரைக்கும் இப்படித்தான் வரும்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘எதுவுமே பாடாத அந்தப் பெண் புலவருக்கு எப்படி பரிசில் கொடுத்தீங்க மன்னா..?’’
‘‘அவர் கண் ஜாடையால் கவிதை பாடியது எனக்கு
மட்டும்தான் புரியும் அமைச்சரே!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘தலைவருக்குக் கொடுத்தது பலான டாக்டர் பட்டமா..?’’
‘‘ஏன் கேக்கறே..?’’
‘‘பெரியோர்களே... தாய்மார்களே...ன்னு பேச்சை ஆரம்பிக்காம, ‘வாலிப, வயோதிக அன்பர்களே...’ன்னு தொடங்கறாரே?’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

ஸ்பீக்கரு

‘‘பதினைந்தாவது வட்டம் சார்பாக இந்த செருப்பை தலைவர் மீது வீசுகிறோம் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறோம்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘அந்த நடிகை நடிச்ச படம் ஒரு வருஷமாக ஓடுதுன்னு சொல்றதை நம்ப முடியலையே..?’’
‘‘அவங்க நடிச்சது விளம்பரப் படம்!’’
- வண்ணை கணேசன், சென்னை.

‘‘புதுசா ஓட்டல் ஆரம்பிச்சும் தலைவருக்கு கட்சி ஞாபகம் போகலையா... எப்படிச் சொல்றே?’’
‘‘முட்டை புரோட்டா முன்னேற்றக் கழகம்னு பேர் வச்சுருக்காரே..!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.