facebook வலைப்பேச்சு



‘அறிவே இல்லையா..? முட்டாளா நீ..?’ என்ற கேள்விகளுக்கு விவாதித்து நிற்காமல் விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி.
- சண்முக வடிவு

எவ்வளவு நீரூற்றினும் நனையவேயில்லை... கல்லின் உட்புறம்!
- மஞ்சுபாஷினி ஜெகதானந்தன்

டயட்டிற்கென பிரத்யேகமான டயட் உணவகங்களின், விலைப் பட்டியல் மட்டும் டயட்டில் இருப்பதில்லை!
- பிரபின் ராஜ்

எல்லோருக்கும் அவரவருக்கான, இன்னும் வெளியில் சொல்லப்படாத ரகசியம் என்றொன்று இருக்கத்தான் செய்கிறது!
- சதீஷ் குமார்

முதுகில் குத்திவிட்டு ஓடியவரின் முதுகைத்தான் பார்க்க முடிந்தது.
- ராஜா சந்திரசேகர்

உண்மையின் பக்கம் போவதை பலர் விரும்புவதில்லை. உண்மையை தன் பக்கம் வளைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்!
- பிரவீணா ராஜன்

‘கிங் மேக்கர்’ ஆவது ரொம்ப ஈசி!
நமக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ராஜராஜ சோழன், ராமன், அக்பர், நெப்போலியன், ஷாஜகான், புலிகேசி என பேர் வைத்தாலே போதும்!
- எழிலன் டென்டல்சர்ஜன்

துணியை வாங்கும் முன் விலையைப் பார்ப்பது; சாப்பிடும் முன் மெனு கார்டில் விலை பார்ப்பது; பிராண்டட் ஷோ ரூம்களைப் பார்த்து விலகிச் செல்வது; பைக்கோ, ஸ்கூட்டரோ மைலேஜை பார்ப்பது; தகுதிக்கு மீறி செலவு செய்வது எளிமை என்பதே அறியாதது என எல்லாம் கலந்ததே மிடில்கிளாஸ்!
- சித்தன் கோவை

சில மருந்துகளோடு ஒப்பிடும்போது வாழ்க்கை ஒருபோதும் இவ்வளவு கசப்பானதாக இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது!
- ஜோதிமணி சென்னிமலை

தலைமுடியை வாருவதே இல்லை... அங்கே அடைகாத்துக் கொண்டிருக்கும் குருவிகளைக் கலைத்தால் என் கவிதை நின்றுவிடும்!
- லீனா மணிமேகலை

உழைப்பவனின் வேட்டி மடித்துக் கட்டும் உரிமை மறுக்கப்படும்போதெல்லாம் வேட்டிப் பிரச்னை எழவில்லை, அதிகாரமிக்கவர்களின் வேட்டிக்கு பங்கம் வந்தபோதுதான் அது தமிழர் பிரச்னையானது.
- யுவான் சுவாங்

ஒழுங்காப் படிக்காட்டி கழுதை மேய்க்கப் போகணும்னு பயந்து பயந்து படிச்ச பல பேர் இன்றைக்கு கழுதைதான் மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்ன ஒன்று, அவை உதைப்பதில்லை!
- செல்லமுத்து குப்புசாமி

பயணச்சீட்டுக்காக பல கைகள் மாறும் பணம்
அத்தனை கனமில்லை, சித்தாளின் செங்கல் சுமை போல்!
- கௌதமன் டிஎஸ் கரிசல்குளத்தான்

பூனை மட்டுமில்ல... யாரு கண்ண மூடிக்கிட்டாலும் உலகம் இருட்டாதான் தெரியும்!
- ஸ்ரீதேவி செல்வராஜன்

எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்கிறார்கள் பெரியவர்கள்...
இழுத்துப் போடுவதையே வேலையாய் செய்கிறார்கள் குழந்தைகள்!
- அம்புஜா சிமி

யாரோவொருத்தி
கடந்து போகிறாள்
எவளோ ஒருத்தியை
நினைவூட்டியபடி..
- கி.சார்லஸ்

twitter வலைப்பேச்சு

@rajakumaari 
விளையாடுவதை நாம் நிறுத்தும்போது, நம்மை வைத்து இந்த உலகம் விளையாட ஆரம்பிக்கிறது

 @saathaan_ 
யாரோ ஒருவரின் மீதான வெறுப்பை கோப்பையில் ஊற்றி பருகிக்கொண்டிருக்கிறேன், போதையாய் அவர் மரித்துக் கொண்டிருக்கிறார்...

 @Guru_Vathiyar   
அழுவதற்கு கொஞ்சம் தனிமை கிடைத்ததென்று சந்தோஷப்படுவதா... இல்லை, அழுவதா..?

 @writercsk   
‘த்ரிஷ்யம்’ படத்தை விட அதற்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளில்தான் அதிக த்ரில் மற்றும் சஸ்பென்ஸ்.
# ரீமேக் தடை!

@Elanthenral     
விடுகதைகளே ரசிக்கும்படி அழகாய்தான் இருக்கின்றன; விடையைக் கேட்டு முட்டாளாக்காதீர்!

@kumarfaculty
அரசு பள்ளியில் மாணவர்களும், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்.

@Star_JayaRT
தண்டவாளங்கள் ஒருபோதும் சேருவதில்லைன்னு சொல்கிறார்கள்... ஏன் அவர்கள் எப்போதும் அவை பிரிவதேயில்லை என்பதை உணர்வதில்லை?!

@riyazdentist 
Ballance ....இப்படி எழுதினால் ஸ்பெல்லிங் மிஸ்டேக்னு ஸ்கூல்ல சொல்லுவாங்க. ஆனா இங்கிலாந்து டெஸ்ட் டீம்ல ஒருத்தன் பேரு இது!!

@NeelSays
சோகங்களைப் பற்றி யோசிக்க முடியாத அளவுக்கு மூளையை பிஸியாக வைத்திருக்க வேண்டும்.

@sorubaravi
நமது பொய்யை சட்டென்று கண்டுபிடிப்பவர், ஏற்கனவே அதைச் சொன்னவராக இருக்கக் கூடும்!

@austinvijay
விலை ஏற்றத்தால் மகிழ்ச்சி அடைந்தால் அவன் வியாபாரி; வருத்தம் அடைந்தால் அவன் நுகர்வோர்...

@InbaSankar   
‘இதுவும் கடந்து போகும்’னு நாம போக வேண்டிய டவுன் பஸ்ஸ சொல்ல முடியாது ... இருங்கடா டேய், நானும் வர்றேன்!

@RajiTalks
கமல்ஹாசன் அவர்களின் படங்கள் தோல்வியடையக் காரணம், அவர் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கான படங்களை
இப்போதே எடுப்பதுதான்!!!

@urs_priya
பலத்துக்காகவே நேசிக்கப்பட்ட அப்பாக்களை முதுமையின் பலவீனத்தை காண்கையில் மனம் பலமிழக்கிறது!

@g_for_Guru  
நானோ கார் ஓனருக்குத்தான் தெரியும், அதற்கு காருக்கு உண்டான டோல் கட்டும்போது வரும் வலி.