
நிதர்ஸனாவின் 'சுட்ட கதை சுடாத நீதி'யில் அனுபவ அறிவை அலட்சியப் படுத்தக் கூடாது என்ற கருத்து முதியவர்களின் அறிவுரையை ஏற்காத யூத்துக்கான தகவல்!
- வரலட்சுமி முத்துசாமி, சென்னை-37.

'விஜய்யின் நடிப்புத் திறமை அதிகமாகி இருக்கு... அவருடைய உருவமும் கேரக்டரும் அப்படியே இருக்கு' என மனதில் பட்டதை மறைக்காமல் சொன்ன ஜெனிலியாவின் வெள்ளை மனதைப் பாராட்டலாம்!
- சம்பத்குமார், சேலம்.

உயிரை குடிக்குது கடல் - உஷார் ரிப்போர்ட் பகீர் தகவல்!
- ஆர்.தனபால், சென்னை-63.

பஊழலுக்கு எதிராக மீண்டும் ஒரு அகிம்சை போராட்டத்தில் களம் இறங்கி இருக்கும் அன்னா ஹசாரேவிற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருவது கவனிக்கப்பட வேண்டியது.
- துரை சுப்ரமணியன், திருச்சி-17.

சினிமா சான்ஸ் பிடிக்க பில்லி சூனியத்தை நாடும் நடிகைகளைக் கண்டு நடுங்கிப் போய் விட்டோம்!
- பி.ராஜசேகரன், மதுரை-10.

இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்கள் இயன்றவரை சமூகம் சார்ந்த நற்பணிகளைச் செய்து வருவது இதயத்துக்கு இதமானது. 'இலக்கியம் இதோ... இதோ...' இனிப்பு!
- உமா மோகன்தாஸ், திண்டுக்கல்.

'மரணத்துக்காக காத்திருப்பது இன்னொரு மரணம்...' என உயிரோட்டமான வரிகளில் காற்றின் கையெழுத்தை அளித்த கவிஞர் பழநிபாரதிக்கு நன்றி.
- பாரதி, சிதம்பரம்.

16 ஆண்டு காலம் உடன் வாழ்ந்து குழந்தைகளையும் பெற்றுக்கொண்ட ரமலத் என்ற பெண்ணின் மனநிலையை அவரது 'உயிரே... உயிரே...' ரிங்டோனே உணர்த்தி விட்டது.
- அம்பூரணி ச.நாராயணன், பாளையங்கோட்டை.

என்னது பம்பாய் பையன் இப்போது 'கொஞ்சம் காதல் கொஞ்சம் காபி' படத்தின் ஹீரோவா? உலகம் அவ்வளவு வேகமாகவா சுத்துது? வாழ்த்துகள் ஹிருதயராஜ்!
- கிருஷ்ணவேணி பாலாஜி, கும்பகோணம்.