
‘தெய்வத் திருமகள்’ ரிசல்ட் விக்ரமுக்கும், இயக்குநர் விஜய்க்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரியைத் தர... விஜய் இயக்கத்திலேயே அடுத்த படத்தை யுடிவிக்காக நடிக்க இருக்கிறார் ச்சீயான். இப்போது நடித்து வரும் ‘ராஜபாட்டை’ யில் சுசீந்திரனின் திட்ட மிடல் கவர, விஜய் படத்தை முடித்த கையோடு சுசீந்திரன் இயக்கத்திலேயே மீண்டும் இன்னொரு படம் நடிக்கப்போகிறார். இவற்றுக்கு இடையில் வரலாற்றுப் படமாகத் தயாராகும் ‘கரிகாலனு’க்கும் அவ்வப்போது டேட்ஸ் கொடுக்கப் போகிறார். இதெல்லாம் முடிந்துதான் பாலா படமாம். அப்ப அடுத்த வருடம் முழுக்க ச்சீயான் செம பிஸி..!