
அஜித் பிரமாதமான பைக் ரேஸர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், எப்படி அசத்தலாக பைக் ஓட்டுவார் என்பதைப் பார்க்க வேண்டுமானால் ‘மங்காத்தா’தான் ஒரே வழி. படத்தில் ஒரு ரேஸ் பைக் ஓட்டி பட்டையைக் கிளப்பி யிருக்கிறார் தல. அடுத்து ‘பில்லா&2’க்காக ஒன்றரை மாதம் ஒரே ஷெட்யூலாக ஐதராபாத்தில் முகாமிட்டிருக்கும் அவர், அதைத் தொடர்ந்து கோவாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் டூர் அடிக்கும் உத்தேசத்தில் இருக்கிறார். இடையில் ஒரே ஒரு நாள் பிரேக் கிடைத்தபோது ரகசியமாக சென்னை வந்து மகள் அனோஷ்காவைக் கொஞ்சிவிட்டுப் போயிருக்கிறார். டாடி... டாடி..!