வலைப்பேச்சு
@yalisaisl - சூப்பர் டூப்பர் ஹிட் படங்களா கொடுத்த வாசு, கேஎஸ்ஆர் எல்லாம் அமைதியா பேட்டி கொடுத்துட்டு போகும் போது, ரெண்டு சுமார் வெற்றிப் படங்களைக் கொடுத்துட்டு, பின்னிட்டேன், கொன்னுட்டேன், ஆடியன்ஸை கத்தியை வச்சு குத்திட்டேன்னு இப்ப உள்ள டைரக்டர்ஸ் சொல்லுறதெல்லாம்...
@Kavitha88081665 - இணையத்தில் அறிவைத் தேடுங்கள் உருப்படுவீர்கள். அன்பைத் தேடாதீர்கள் உருக்குலைந்து போவீர்கள்...
@manuvirothi - தில்லுமுல்லு செய்தும் 38 தொகுதியில் தோற்று ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றால் அதன் பேர் வெற்றிக்கூட்டணி.
@skpkaruna - சென்னை பேருந்துகளில் பிட்பாக்கெட்களிடம் ஒரு கட்டுப்பாடு உண்டாம்! ஒரு முறை பர்சை அடிச்சா, அதே நபரிடம் மீண்டும் வெகு நாட்களுக்கு கை வைக்க மாட்டார்களாம்! திருடரிடம் இருக்கும் இரக்கம் கூட இந்த ஆஸி அணியிடம் இல்லையே! ஏண்டா! முந்தா நாள்தானே தலைகீழா தொங்கவிட்டு அடிச்சீங்க! மீண்டுமா?
@mekalapugazh - ஆணின் பார்வை உறுத்தாத அளவுக்கு உடை அணிய முடியும்... ஆனால், கற்பழிக்க நினைப்பவனை மனம் மாற்றம் அடையும்படியான உடையை எந்த மகளிராலும் அணிய முடியாது.
@teakkadai1 - ஒரு சினிமா ரசிகனா தியேட்டர்லதான் பார்க்கணும்னு நினைச்சாலும் செலவை நினைச்சா ஓடிடியில் படங்கள் வந்தா நல்லதுதான்னு தோணுது.
@asdbharathi - வயதாகி விட்டது என்று உங்கள் நியாயமான ஆசைகளைத் தவிர்க்க வேண்டாம். மிச்சமிருக்கும் வாழ்க்கையில் இளமைக்காலம் இதுவே.
@umakrishh - சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது...
@mrithulaM - நம்ம கூட இருக்க ஒருத்தர் வேணும்னு நினைச்சு கல்யாணம் பண்ணக் கூடாது... இவங்க இல்லாம நம்மால இருக்க முடியாதுன்னு நினைக்க வைக்கிறவங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்.
@DILIPDRAVID - IAS, Doctor, Engineer, Chemistry வாத்தியார்... இப்டி சின்னதுல ஒவ்வொரு க்ளாஸ்லயும் ஒரு ட்ரீம் வந்துட்டு இருக்குமே!
@_karunai_malar - முன்ன மழை வந்தா ஜாலியா இருக்கும் WFH போட்டுட்டு வீட்ல இருக்கலாம்னு. இப்ப மழை ஏன்தான் வருதோன்னு இருக்கு. தேவையானதை வாங்குறதுக்காக கொஞ்சமாச்சும் வீட்ட விட்டு வெளிய போக அப்ப சான்ஸ் இருந்தது. இப்ப கொரோனாவால அதுவும் போச்சு.
@Gokul Prasad - ஆண்மையப் பார்வை Vs பெண்ணியப் பார்வை - ஆறு வித்தியாசங்கள் ப்ளீஸ்... தன்னை மட்டுமே முன்னிறுத்தி, தன்னைச் சுற்றியே உலகம் இயங்குவதாக எண்ணி, ஓர் ஆண் சிந்தித்தால் அது ஆண்மையப் பார்வை. அதே மெகலோமேனியாக் ஆண்மகனின் இடத்தில் ஒரு பலவீனமான பெண்ணைப் பொருத்திப் பார்க்க முயன்று, அவளுடைய இயலாமை காரணமாக அவள் அதற்குச் சரிப்பட்டு வரவில்லை என்றால், ‘இந்த உலகம் எவ்வளவு கொடுமையானது’ எனப் புலம்பிக்கொண்டிருப்பது பெண்ணியப் பார்வை. Funny feminists.
@Ramanujam Govindan - ரிட்டயர்ட் ஆகி இருபது வருஷம் ஆன ஒருத்தர் ‘நாளை திங்கள்கிழமை’ அப்படின்னு பயப்படற மாதிரி படம் ஒண்ணைப் போட்டிருக்காரு. ஒருவேளை அவர் மனைவி திங்கள்கிழமை ஊர்லேர்ந்து வராங்க போலும்!
@kadaikkutty - Straight forward ஆக பேசுறதுக்கும் மூஞ்சில அடிச்சாப்ல பேசுறதுக்கும் வித்தியாசம் இருக்கு...
@i_Soruba - தியாகத்தின் போதையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்ற எண்ணம் வராத வரைதான்.
@Sivaji_KS - தமிழகத்தில் தளர்வு களுடன் ஊரடங்கு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு; தமிழக அரசு அறிவிப்பு - ஊரடங்குக்கு உள்ள மரியாதையே போச்சு.
@Aakashkannan96 - கறிக்கடைக்காரரின் இறுதி ஊர்வல பூக்களை ஆடுகள் ருசிக்கின்றன..!
@hanitha312 - குழந்தைகள் நிறைந்த ஒரு வகுப்பறைக்குள் சென்று ‘பென்சில் இருக்கா ப்ளீஸ்?’ என்று கேட்டுப் பாருங்கள். மனிதக்கரங்களின் அதிகபட்ச வேகத்தைக் காணலாம்!
@Bogan Sankar - காதலுக்குக் கண் இல்லை என்ற சொலவடையை அடிக்கடி கேட்கிறோம். காதல் பண்ணும்போது நமது மூளையின் சிந்திக்கும் பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைகிறது என்று நிஜமாகவே கண்டுபிடித்திருக்கிறார்கள். நாம் சாதாரண நேரங்களில் செயல்படுவது போல காதலில் செயல்படுவது இல்லை. குடித்திருப்பது போலவேதான். காதல், மூளையில் ஊறும் கள்.
Love is Blind என்ற சொலவடையை முதலில் சாசர் பயன்படுத்துகிறார். ஆனால், பிரபலமாக்கியது ஷேக்ஸ்பியர்தான். ‘Two gentlemen of Verona’வில் இப்படி எழுதுகிறார்’ For love is blind And lovers can’t see the pretty follies They themselves commit
- Pretty follies என்ற வார்த்தையைக் கவனிக்கவேண்டும். இந்த நாடகத்தில் ஜெசிகா என்கிற கதாபாத்திரம் காதலுக்காக ஆண் வேடத்தில் இருப்பார். அதே காதலுக்காக பெண் வேடத்தில் இருக்கும் ஆணை அவர் சந்தித்து குழப்பமாகி என்று ஒரே comedy of errors. ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் இந்த ஆண் பெண் வேஷ மாறுதலை நிறைய பயன்படுத்தி இருக்கிறார்.
காதல் என்பது ஒருவகையில் sex changeதான். Through sex exchange. ஷேக்ஸ்பியர் ஒரு மேதை. முகநூலில் காதல் உருவாக்கும் ஃபேக் ஐடிகளை அப்போதே முன் உணர்ந்துவிட்டார்.
@Vinayaga Murugan - ‘இந்த சிக்கன் ரொம்ப ஜூஸியா இருக்கு...’, ‘மசாலா டேஸ்ட் ஷட்டிலா இருக்கு...’, ‘பிரியாணி வேற லெவல்...’ எல்லா யூ டியூப் உணவு சேனல்களிலும் இந்த மூன்று வார்த்தையைத்தான் மாறிமாறி சொல்றானுங்க. 90’ஸ் கிட்ஸ்களுக்கு பொண்ணுதான் கிடைக்க மாட்டேங்குதுன்னா வார்த்தைகளுமா?!
|