Hot கிசுகிசு



8C!

லாக்டவுனுக்குப் பிறகு நடிகர்கள், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற குரல்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுபடவில்லை. இப்போது ஓடிடி ரிலீஸ்களும் சக்சஸ் ஆவதால், தன் சம்பளத்தை பல ‘சி’க்களுக்கு உயர்த்திவிட்டார் அந்த ஹீரோயின்.

‘நீங்க நாலுதானே வாங்கினீங்க... இப்ப டபுளா ஏத்திட்டீங்களே?’ என கேட்டவர்களிடம் ‘நோ பார்கெயின். ஒன்லி ஃபிக்ஸட் ரேட்’ என்று கறார் காட்டுகிறாராம் அந்த ஹீரோயின். எல்லாம் உடனிருக்கும் புதுத் தயாரிப்பாளரின் ஸ்கெட்ச் என்கிறது கோலிவுட்.

1C!

சோலோவாக இன்னும் ஒரு ஹிட் கூட கொடுக்காத நடிகை அவர். பொண்ணுக்கு பாடவும் தெரியும். ஆடவும் தெரியும். இப்போது ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அவரை கமிட் செய்யலாம் என கிளம்பிப் போனார் ஒரு புது புரொட்யூசர். முகம் மலர்ந்து ‘வெல்கம் பொக்கே’ கொடுத்த நடிகை, கதை எதுவும் கேட்காமல் கோடியை நெருங்கும் ரேஞ்சில் பேமென்ட் கேட்டு மிரள வைத்திருக்கிறார்.

‘உங்கள வச்சு, மொத்த படத்தையுமே 50 லட்சத்துல முடிச்சிடலாம்னு வந்தேன்’ என சொல்லியிருக்கிறார். கடுப்பான நடிகை, பு.பு.வை ஆங்கிலத்தில் ‘காச்மூச்’சியிருக்கார். இதற்கெல்லாம் காரணம், முந்தைய படத்தினர் தெரியாத்தனமாக நடிகைக்கு 70 லட்சம் சம்பளம் கொடுத்ததுதான்!

ஐடியா கொடுத்த ஸ்லிம் நடிகர்!


அந்த தொகுப்பாளினி தனது நட்பு வட்டத்தினரின் தயவால் அவ்வப்போது படங்களிலும் தலைகாட்டுகிறார். விஷயம் அதுவல்ல. லொடலொட பேபி, ஸ்பாட்டில் இருந்தால், யாரிடமும் பேசிக்கொள்ளாமல் கப்சிப்பென மெடிடேஷன் எஃபெக்ட்டில் அமர்ந்திருக்கிறாராம்.

இதுக்கெல்லாம் காரணம், அவரைப் பார்க்கும் நட்பு வட்டமெல்லாம் ‘எப்போ மறுமணம் பண்ணப் போறே’ எனக் கேட்டு தெறிக்க விடுவதுதானாம். ‘இந்த சைலண்ட் மோட் யோகா’வுக்கு ஐடியா கொடுத்தது அந்த ஸ்லிம் ஹீரோ என்றும் தகவல் கசிகிறது.

தன்னையே கலாய்க்கும் காமெடி!

சும்மா ரெண்டு சீனில் தலைகாட்டிய படத்தைக் கூட அவர்தான் ஹீரோ என்ற ரேஞ்சுக்கு அந்த காமெடி நடிகரை விளம்பரப்படுத்தியதன் விளைவு இப்போது தெரிய ஆரம்பித்திருக்கிறது. வாடகை சைக்கிள் போல மணிக் கணக்கிற்கு சம்பளம் வாங்கிய காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் சகட்டு மேனிக்கு டிஸ்கவுண்ட் அள்ளிக் கொடுத்தும் இப்போது புதுப் பட வாய்ப்புகள் வருவதில்லையாம். ‘ஊர்ல திருந்திட்டீங்களாய்களா’ என தன்னையே கலாய்த்து புலம்ப ஆரம்பித்திருக்கிறாராம் அவர்.

ஷியஸ்