மூங்கில் பிஸ்கட்



மூங்கிலில் நாற்காலி, கட்டில், பாட்டில் என வீட்டு உபயோகப் பொருட்களைப் பார்த்திருப்போம்.

மூங்கிலில் பிஸ்கட்தான் லேட்டஸ்ட் டிரெண்ட். இயல்பாகவே இனிப்புச் சுவையைக் கொண்ட ஒரு மூங்கில் இனம் ‘முலி’. இதன் தண்டு ரொம்பவே மெல்லியது. திரிபுராவில் இந்த மூங்கில் அதிகம் விளைகிறது. கோதுமை மாவு, வெண்ணெய் மற்றும் பிஸ்கட் செய்வதற்கான மற்ற பொருட்களுடன் முலியின் தண்டையும் சேர்த்து மூங்கில் பிஸ்கட் செய்கிறார்கள்.

இதன் சுவை தனி ரகம். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது. வைட்டமின், மினரல், புரதச் சத்துகளும் அதிகம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அத்தியாவசியமானது இந்த பிஸ்கட். ஆஸ்துமா, வயிற்றுப்புண்ணுக்கும் நல்ல மருந்து. தவிர, கொழுப்பைக் குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

கடந்த செப்டம்பர் 18ல் உலக மூங்கில் தினம் கொண்டாடப்பட்டது. அன்று திரிபுராவின் முதல்வர் பிப்லாப் குமார் மூங்கில் பிஸ்கட்களையும் மூங்கிலாலான தேன் பாட்டிலையும் அறிமுகம் செய்துவைத்தது ஹைலைட்.

த.சக்திவேல்