சிறுகதை - வைரஸ் Lab



அந்த சோதனைக் கூடத்தின் கதவுகள் மூன்று மாதத்திற்குப் பிறகு இலேசான க்ரீச் சப்தத்துடன் திறக்கப்பட்டது. கோயிலை விடவும் இறுதி யாத்திரைக்குச் செல்லும் மலர்களின் மதிப்புதான் அதிகம்.பேயென தம்மைத் துரத்தும் அந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ விஞ்ஞான உலகமே பட்டங்களால் குளிப்பாட்டி அனுப்பிய ஸ்டீபனின் சோதனைக் கூடம் இது.

இயந்திரன் ரோபோவைக் கண்டுபிடித்த ரஜினியைப் போல் முகம் மறைத்த தாடியின்றி பளிச்சென்று வெகு அழகாகவே 60ல் இருபதைக் குறைத்திருந்தார். உடல் முழுவதும் வைரஸ் தாக்காத அளவிற்கு முகக் கவசமும் உடல்கவசமும் அவரைத் தழுவி யிருக்க, வெளிப்பட்டு இருந்த கண்களில் தெரிந்தது எதிர்பார்ப்பா ஏமாற்றமா என்றெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு, லிசாவிடம் வருவோம்.லிசா உண்மையான இருபது களின் முடிவில் இருப்பவள்.

ஸ்டீபனின் வலது கை... தன் தனிமையை பரிசோதனைப் பறவைகளோடும், விலங்குகளோடும் கழிப்பவள். ஸ்டீபன் இறுக்கமான முகத்துடன் சிரிஞ்ஜில் மருந்தை நிரப்பும்போதும் சலனமின்றி கூண்டிற்குள் விழிபிதுங்கி வாயில் நுரை தள்ளி இறந்திருக்கும் அவற்றுக்காக சத்தமின்றி அழுபவள்.

மனித உயிர் பிழைத்திருக்கும் ஒவ்வொரு மருந்துக்குப் பின்னரும் ஏதோவொரு வைரஸோடு இம்மாதிரி சோதனைக்குட்படுத்தப் பட்ட விலங்குகளும் இருக்கும் என்பதை பல பேர் யோசிக்கக் கூட மாட்டார்கள்.

ஆம்.... நேதாஜியின் வரிகளாக ‘உங்கள் உதிரத்தைக் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை வாங்கித் தருகிறேன்’ என்றதால் உயிரையே கொடுத்த அந்த ஐஎன்ஏ வீரர்கள் சுதந்திரத்திற்குப் பின் அகதிகளாகத் திரிந்து அந்த தியாகத்திற்கான பென்ஷன் கூட இல்லாமல் இறந்தார்கள்.
அப்படித்தான் இந்த உயிரினங்களும்.

“யம்மா... அய்யா இருக்காங்களா?” வழக்கம்போல் விலங்குகளைத் தரும் பொன்னனின் குரல். வெற்று உடம்புடனும் வெற்றிலையால் சிவந்த வாயுடனும், ‘‘அய்யா இரண்டு குரங்கு கேட்டாரும்மா!” என்றான்.அடர் ப்ரவுன் நிறத்தில் கண்களில் திராட்சையை ஒட்ட வைத்ததைப் போன்ற அழகுடன் துறுதுறுப்போடு இரண்டு குரங்குகள் காலியான கூண்டுகளைக் காணும் போதெல்லாம் வாடிய பயிரைப் போல வாடியவள் லிசா. இப்போது இந்தப் புதிய வரவு வேறா...

கடவுளே! இந்த பரிசோதனைக் கூடங்களில் உயிர் பிரியும் ஓசையை அறியத் துடிக்கிறதோ இன்னும் இன்னும் உலகம்...
“அட என்னம்மா நீ... குரங்குகளையே பார்க்காத மாதிரி பாத்துகினே இருக்கியே? இரண்டும் இணை குரங்குங்க. ஒரே குகைக்குள்ளே சிக்கிடுச்சி. அய்யாகிட்டே சொல்லி கொஞ்சம் ரூவா தரச் சொல்லு தாயீ!” அச்சடித்த காகிதம் இடம் மாறியது.

“ஏன் தாயீ... எதைக் கொடுத்தாலும் முகம் சுணங்காம வாங்கி வைச்சுக்கிறே? உனக்கு பயமே இல்லையா?’’
“மனிதர்களைப் பார்த்தா தான் பயம் பொன்னா. இந்த அத்துவானக் காட்டில் என்னுடன் நீண்ட நேரத்தை செலவழிப்பதே இவை மாதிரி
மிருகங்கள்தானே!”“ஏன்... அய்யா உன்கூட பேசமாட்டாரா? இப்படித்தான், வயசு கூடின ஆளைக் கட்டிக்கிட்டா இந்த நிலைமைதான்...” அவனின் கவலை அவளுக்கு கோபத்தை விடவும் சிரிப்பைத்தான் தந்தது.

“பொன்னா... அவரு என் புருஷன் இல்ல... எனக்கு சம்பளம் தர்ற முதலாளி!”
“முதலாளியா... அட எம்மா அழகா இருக்கேம்மா... நீ உடம்பு நோகாம ஏதாவது ஏசி ரூமு வேலைக்குப் போவியா... இந்தாளு கூட ஏம்மா மல்லு
கட்டுறே? சரி சரி போ அப்பாலே... அதுக்கும் அந்தாளு கத்துவாரு... நாளைக்கு மலைக்காட்டுக்குப் போறேன். போனதபாவே வவ்வாலு கேட்டாரு... நாலு நாளைக்குள்ளே கொண்டு வர்றேன்னு சொல்லு...’’பொன்னன் விடைபெற்றுப் போனதும் தன் இரு கைகளையும் பற்றியபடி நின்றிருந்த அந்தக் குரங்குகளைப் பார்த்தாள்.

அம்மா கூட இருந்தபோது மலைக்கோயில்களில் இப்படிப் பார்த்த ஞாபகம். கையிலிருக்கும் தேங்காயையும், அடையையும் தூக்கிக்கொண்டு போகும் குறும்புக்காரர்கள். காலியான கூண்டிற்குள் அடைத்து இரண்டு மலைவாழைப்பழங்களை அவற்றுக்குக் கொடுத்தாள்.ஸ்டீபனின் மருந்துக் கூடத்தின் ரசாயனக் குப்பிக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் திரவத்தின் இரை என்று பரிதாபம் வந்தது. அவற்றுக்கும் ஏதோ புரிந்ததோ என்னவோ, அவளையும் ஒரு பரிதாபப் பார்வை பார்த்தது.

ஒவ்வொரு முறையும் கூண்டிற்குள் அடைபடும் விலங்குகளோடு அவளுடைய நேசத்தைக் கொல்வதே அவளுக்கு வேலை. ஸ்டீபன் மட்டும் ஒரு நான்கு நாட்களுக்கு இந்த பரிசோதனைக் கூடம் பக்கம் வராமல் இருந்தால் சட்டென்று எல்லா கூண்டுகளையும் திறந்துவிட்டி ருக்கலாம்.
“முட்டாளே!” என்ற ஸ்டீபனின் கத்தலில் விழித்துக் கொண்டாள் லிசா.

தன் மனதில் நினைத்தது தெரிந்து விட்டதா இந்தக் கிழவனுக்கு!
‘‘இவைகளுக்கு ஏன் உணவு கொடுத்தாய்? லட்சக்கணக்கான உயிரைக் கொல்லும் வைரஸுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கப் போகிறோம். அது உன்னிடம், பசிக்கிறது, வாழைப்பழம் தா என்று கேட்டதா? ஒருவேளை உன் இனம் என்று தோன்றியதால் நீயாகத் தந்தாயா?’’ ஸ்டீபனுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் அர்ச்சிப்பார்.

அந்த பழுப்பு நிற மேசையின் மேல் பரப்பப்பட்டிருந்த வண்ண வண்ண திரவங்களை குப்பிகள் தங்கள் வயிற்றுக்குள் நிரப்பிக் கொண்டு இருந்தன - முழுமையாக இல்லாமல் அரை வயிறாக. சிலவற்றில் சாலையோர ஆட்டோவில் வெளிவருவதைப் போன்ற கரும்புகையும், சிலது சுனாமிக்கு முன்பிருந்த ஆழ்கடலின் அமைதியையும் கொண்டிருந்தன.

வறட்டு ரொட்டிகள் இரண்டை பச்சைத் தக்காளி வெங்காயத்துடன் உண்டுவிட்டு மீண்டும் ஃபார்முலாக்களை எழுதினார் ஸ்டீபன்.  “நான் எப்போ வருவேன்னு தெரியாது அதுவரைக்கும் மருந்து மாத்திரைகளை எல்லாம் ஒழுங்கா எடுத்துக்கோம்மா!” ஸ்டீபன் தந்த கால் லட்சத்தை கத்தையாய் அம்மாவிடம் தந்து விட்டு, கல்யாணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று கேட்ட பிரபுவிற்கு வெறும் சிரிப்பை மட்டும் பதிலாக்கிவிட்டு வந்தாயிற்று. இனி ஸ்டீபன் கிளம்பும் போதுதான் கிளம்பவேண்டும்.

பரிசோதனைக் கூடத்தின் அடுத்தடுத்த அறைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த அறையில் லிசா. மலைப்பாங்கான இடம் என்பதால் மிருகங்களின் இடையூறு இருந்தால் உடனே ஸ்டீபனின் துப்பாக்கி விழித்துக் கொள்ளும்.கேமராக்களின் வழியே கூடத்தைப் பார்வையிட்டுக் கொண்டே இன்றைய ஆராய்ச்சிக் குறிப்புகளையும் அவருடைய கிறுக்கல் கையெழுத்தில் இருந்த குறியீடுகளையும் கணிப்பொறியில் சேகரித்துக் கொண்டிருந்தாள் லிசா.

கவனிக்க யாருமில்லை என்ற தைரியத்தில் முயல் தன் காரட்டை இழுத்துக்கொண்டு கூட்டிற்கு அந்தப் பக்கம் சென்றது. வெள்ளை எலி தப்பும் நோக்கத்துடன் அந்த இரும்புக் கூண்டை வலையென எண்ணிதன் கூரிய பற்களால் சுரண்டிக் கொண்டிருந்தது.அவற்றின் குறும்பை ரசித்துக் கொண்டே வந்தவளின் கண்கள் குரங்குகளின் கூண்டிற்கு வந்ததும் நின்றன. கம்பிகளின் வழியே ஒன்றையொன்று விலகாத பார்வையைப் பார்த்துக் கொண்டிருந்தன.

அந்தப் பார்வைகளின் பரிமாற்றத்தில் என்னவோ அர்த்தம் தொனித்தது. அவற்றின் கைகள் ஒன்றையொன்று தழுவிக் கொண்டு அங்கே நீண்ட நாள் மறைத்து வைத்திருந்த காதலின் பரிமாணம் ஒரு புது உயிரின் எழுச்சியை அரங்கேற்றிக்கொண்டு இருக்க, கேமராவை அணைத்தாள் லிசா. உணர்வுகள் யாவருக்கும் பொதுதானே?!

மறுநாள் காலை அவள் எழுந்திருக்கும் முன்னரே இரண்டு குரங்குகளில் ஒன்றிற்கு மருந்தைச் செலுத்தியிருந்தார் ஸ்டீபன்.“இந்தா... இதுதான் அந்த வைரஸ் கிருமி. இதைப் போட்ட பதினாலு நாளில் நோயின் தீவிரம் அதிகமாகும். நான் கண்டுபிடித்த நோய் எதிர்ப்பு சக்தி ஊசியை இந்த ஆண் குரங்கின் மேல் செலுத்தியிருக்கிறேன். நோயைத் தாண்டி பதினைந்தாம் நாள் அது உதயத்தைப் பார்த்துவிட்டால் அடுத்த நோபல் எனக்குத்தான்!” கொக்கறித்தார்.

இம்முறை குரங்குகளின் கண்களில் லிசா கண்டது நேற்றைய நிகழ்வின் ஆலிங்கணக் குறும்பின் குறிப்புகளை. ஒருவாரம் இப்படியே நகர்ந்தது. அநேகமாக ஸ்டீபன் ஏதாவது போனில் மூழ்கியிருப்பதும், லிசாவிற்கு தியரிகள் தயாரிப்பதுமே வேலையாகிப் போக, எட்டாவது நாள் துவக்கத்தில் வைரஸ் ஏற்றிய குரங்கிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வேக வேகமாக மூச்சை  வெளியிட முயன்று அது முடியாமல் அவதிப்பட்ட அந்த ஆண் குரங்கின் இறுதி யாத்திரையின் ஓலம் லிசாவைத் துடிக்கச் செய்தது என்றால், அள்ளி மகிழ்ந்த தன் இணையின் நிலை கண்டு சுவரின் ஓரம் ஒட்டிக் கொண்டிருந்த பெண் குரங்கின் நிலையோ உச்சக்கட்ட பரிதாபமாக இருந்தது.

டாக்டர் வருவதற்குள், அவரைக் காணப் பிடிக்காமல் தன்னை முடித்துக் கொண்டது அந்த ஜீவன்.  “ஓ மை காட்! ஹைட்ரோ சோடியம் க்ளோரைடின் கலவை சற்று அதிகப்படியாகும் போதே இம்மாதிரி ஏதாவது சிக்கல் வரும் என்று நினைத்தேன்! புவர் மங்கி...” என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு, “என் வெற்றி இன்னும் பதினாலு நாட்கள் தள்ளிப் போடப்பட்டு விட்டது...” என்று கவலையுடன் மீண்டும் ஒரு
சிரஞ்ஜில் வைரஸ் மருந்தை எடுத்துக்கொண்டு அடுத்ததை நோக்கிப் போனார் ஸ்டீபன்.

மூடிவிட்ட அந்தக் கூண்டிற்குள் தன்னைக் காத்துக்கொள்ள சுவருக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டுவிட மாட்டோமா என்று நகரவே, “லிசா, என்ன மரம் மாதிரி நிக்கிறே? அந்த பெண் குரங்கைப் பிடி...’’ என்று ஆணையிட்டார் ஸ்டீபன்.ஒரு வெறுப்பான பார்வையை அவர் மீது வீசியபடியே, மனமின்றி அந்தக் கூண்டின் அருகில் உள்ள குமிழைத் திறக்கவும், அங்குமிங்கும் அலைந்து சுற்றியிருந்த மின்சார வயர்களில் தன்னைத்தானே கட்டிக் கொண்டது அது.

சற்று நேரத்தில் அதன் உடல் வெட்டி வெட்டி இழுக்கத் தொடங்க... “முட்டாள்! இங்கே சர்க்யூட் ப்ராப்ளம் என்று சொன்னேனே... அந்த எலக்ட்ரீஷியன் வரவில்லையா?” என்று கத்தியபடியே வெளியே ஓடினார் ஸ்டீபன் உயிர் பயத்தில்!

கண்முன்னே துடித்து அடங்கிய அதன் ப்ரவுன் நிறம் இப்போது கறுத்துப் போய் அந்த நிலை குத்திய கண்கள் மட்டும் தன் துணையைப் பார்த்தது...
லிசா விம்மல்களை அடக்கிக் கொள்ளப் போராடினாள்.

ஹோட்டல் ஓனர் கார்த்திகா!

‘அலைகள் ஓய்வதில்லை’ ராதா மும்பையிலும், திருவனந்தபுரத்திலும் ஸ்டார் ஹோட்டல் நடத்தி வருவது தெரிந்த செய்திதான். அவர்களின் செல்ல மகளில் ஒருவரான கார்த்திகா, இப்போது தன் அப்பாவுக்கு துணையாக ஹோட்டல் பிசினஸை கவனித்துக் கொள்ளுகிறாராம். சமீபத்தில் கார்த்திகாவும், துளசியும் தங்களது பெற்றோரின் 25வது ஆண்டு திருமண விழாவை கேரளாவில் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த விழாவில் ராதாவின் ‘எயிட்டீஸ் க்ரூப்’ ஃப்ரெண்டான சுஹாசினியும் கலந்துகொண்டு தம்பதியரை வாழ்த்தியிருக்கிறார்.

பேக்கரி ஓனர் வரூ!

‘லை ஃப் ஆஃப் பை’ என்ற பெயரில், புதிதாக baking நிறுவனம் ஒன்றை துவங்கியிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

ரொம்பவே ஃப்ரெஷ் சீஸ் வகைகளை இப்போது தயாரித்து கொடுத்து வருகிறார்களாம். ‘‘நம்பவே முடியல... சின்ன லெவல்லதான் இந்த கம்பெனியை ஆரம்பிச்சிருக்கேன். எடுத்த உடனேயே நூறு ஆர்டர்கள் குவிஞ்சிடுச்சு. நம்பவே முடியாத உற்சாகத்துல இருக்கேன்...’’ என
பூரிக்கிறார் வரலட்சுமி.

மியூசிக் ஓனர் கீர்த்தி!

ஓணம் ஸ்பெஷலாக சில்க் காஸ்ட்யூமில் கலக்கிய கீர்த்தி சுரேஷ், இப்போது இசைக்கச்சேரி நடத்தும் அளவுக்கு தேறிவிட்டார். யெஸ். பொண்ணு இப்போ வயலின் வாசிப்பதில் எக்ஸ்பர்ட். சமீபத்தில் தன் மியூசிக் ஃப்ரெண்ட்ஸ் சிலரை அழைத்து வீட்டில் கிளாசிக்கல் கச்சேரியை நடத்தியதுடன், அந்த இசை டீமை தனது சோஷியல் மீடியா பக்கத்திலும் தெறிக்க விட்டு புன்னகைக்கிறார் கீர்த்தி.

சரக்கு ஓனர் இஷா

தமிழில் எப்போதோ வெளியான ‘யார் இவன்?’ படத்தின் ஹீரோயின் இஷா குப்தாவைப் பற்றித்தான் பாலிவுட்டில் பேச்சு. அங்கே அவர் கமிட் ஆகும் படங்களில் எல்லாம் டூ பீஸ், பிகினி காஸ்ட்யூம்களில்தான் மினுமினுக்கிறார்.

இஷா, டாப் மாடலும் கூட! ஆனால், அதெல்லாம் வைரல் ஆனதில்லை. இப்போது தனக்குப் பிடித்த சரக்கு எது? சரக்கின் மிக்ஸிங் எந்த மீட்டரில் இருக்கவேண்டும் என்பது குறித்து தனது இன்ஸ்டாவில் வெளிப்படையாகவே மனம் திறந்துள்ளார். மிக்ஸிங்னா இதான் மிக்ஸிங்... என கையில் ஜானிவாக்கர் சகிதமாக
விளக்கியும் உள்ளார்!

ஃபேஷன் ஓனர் தீபிகா!

பாரீஸின் டாப்மோஸ்ட் ஃபேஷன் டிசைனர் நிகோலஸ் கீஸ்கொயர், ‘டோன்ட் டேர்ன் அரவுண்ட்’ என்ற பெயரில் ஃபேஷன் புத்தகம் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார். ஹாலிவுட்டில் ஹாரர் படங்களில் நடித்த டாப்மோஸ்ட் ஸ்டார்களைக் கொண்டு உருவாக்கியிருக்கும் ஃபேஷன் போட்டோ ஷூட் புத்தகத்தில், தீபிகா படுகோனேவும் இடம் பிடித்திருக்கிறார். பாலிவுட்டில் இருந்து இடம்பெற்ற ஒரே நடிகை தீபிகாதானாம்.

- லதா சரவணன்