கார்த்தி ப்ளேஸ்டோர்



கையிலிருப்பது: ஐபோன்.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்: ‘Never give up on something that you can’t go a day without thinking about.’

மொபைல் ஹோம் ஸ்கிாீன் பிக்சர்: ‘தேவ்’விற்காக உக்ரைன் சென்றபோது அங்கே லொகேஷனில் க்ளிக்கிய இயற்கைக் காட்சி ஒன்று!

மொபைலில் பாதுகாக்கும் ஒன்று: ‘காற்று வெளியிடை’ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் குரு மணிரத்னத்துடன் சேர்ந்து புன்னகைக்கும் புகைப்படம்.

சமீபத்திய சந்தோஷம்: உழவன் ஃபவுண்டேஷன் நிறுவியது...

வீட்டில் இருந்தால்: குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுப்பது!

ராசி: மிதுனம்.

பயணத்திற்கு: பென்ஸ், பிஎம்டபுள்யூ.

அப்பாவின் அட்வைஸ்களில் ஒன்று: ‘ஒவ்வொரு நாளும் பெஸ்ட்டா பண்ணு... நாளைக்கு பெட்டரா பண்ணிக்கலாமேனு யோசிக்காதே!’

முணுமுணுக்கும் பாடல்: ‘இளையநிலா பொழிகிறது...’

முதன் முதலில் வாங்கிய சம்பளம்: தனியார் நிறுவனம் ஒன்றில் பி.எஃப். பிடித்தம் போக ரூ.4250.

ரிலாக்ஸ் டைம்: பாட்மின்டன்.

பிடித்த வாக்கியம்: நம்மாழ்வாரின் ‘நஞ்சில்லா உணவை படைப்போம். நஞ்சில்லா உணவை உட்கொள்வோம்!’

ஹாபி: ட்ரெக்கிங் ப்ரியர்.

மை.பா