டோலிவுட் கனவுக்கன்னி!



பன் பட்டர் கன்னமும் சிக்லெட் சிரிப்புமாக தெலுங்குத் திரையுலகையே கவர்ந்திழுத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ்  விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த ‘கீத கோவிந்தம்’ ஹிட்டில் மகேஷ்பாபுவே, ‘ராஷ்மிகா absolutely brilliant’ என கங்கிராட்ஸ்  பொக்கே நீட்டியதில், கரைபுரண்ட காவிரி வெள்ளம் போல மகிழ்ச்சியில் பொங்குகிறார். ‘‘மகேஷ்பாபுகாருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.  அவர்கிட்ட இருந்து அவ்ளோ பெரிய பாராட்டு வரும்னு நினைக்கல...’’ சிலிர்க்கும் ராஷ்மிகா, ஒரு சாண்டல்வுட் லட்டு.‘‘பூர்வீகம் கர்னாடகா பக்கம் விராஜ்பேட். கூர்க்ல படிச்சேன். சைக்காலஜி, ஜர்னலிசம்ல டிகிரி முடிச்சிருக்கேன். எல்லா ஹீரோயின்களின்  இன்ட்ரோதான் எனக்கும். படிக்கும் போதே மாடலிங். அங்கிருந்து சினிமா!

பெங்களூரு டைம்ஸ்ல ‘most desirable women 2014’ல எனக்கு 24வது இடம் கொடுத்திருந்தாங்க. இதை சொல்றதுக்கு ரீஸன் இருக்கு.  2017ல அதே டாபிக்ல நான் முதலிடத்தில் வந்தேன். எல்லாமே கடவுள் கிஃப்ட். தாய்மொழியான கன்னடத்தில் ‘கிரிக் பார்ட்டி’யில்  அறிமுகமானேன். முதல் படத்திலேயே சாண்டல்வுட் முழுக்க குட் நேம். அங்கிருந்து தெலுங்குக்கு ட்ராவல். ‘சமக்’, ‘சாலோ’வுக்குப் பிறகு  பண்ணின ‘கீதகோவிந்தம்’ பிளாக் பஸ்டராகும்னு நாங்களே எதிர்பார்க்கல!’’ என்கிற ராஷ்மிகா மந்தனா, க்ளீன் அண்ட் க்ளீயர் ஃப்ரெஷ்  ஃபேஸ் என்ற பட்டமும் வென்றவர்.தமிழுக்கும் வாங்க ராஷ்மிகா..!                      l

- மை.பா