ஷாக்!




ரீடர்ஸ் வாய்ஸ்


தலைவர் கலைஞரின் போராட்ட வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டிய ‘ஞாயிறு போற்றுதும்’ மிகச்சிறந்த நினைவஞ்சலி!
- மனோகர், கோவை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; சம்சுதீன், சென்னை; லட்சுமிநாராயணன், வடலூர்; வண்ணை கணேசன்,  பொன்னியம்மன்மேடு; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; முருகேசன், கங்களாஞ்சேரி; சூரியதாஸ், சிலட்டூர்; ராஜ்குமார், குன்னூர்;  மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி; கைவல்லியம், மானகிரி.

கிளோஞ்சியா உள்ளிட்ட 40 லட்சம் அசாம் மக்களின் குடியுரிமையை அரசியலுக்காக மறுக்கும் இந்திய அரசின் முடிவு, வேதனை.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; முருகேசன், கங்களாஞ்சேரி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ஜெயச்சந்திரபாபு, மடிப்பாக்கம்.பொள்ளாச்சி  மாசிலாமணி,

மரம் வளர்ப்பதோடு அதனை பராமரிக்க தனது மகனையும் ஊக்குவிப்பது நாம் கற்கவேண்டிய சூழல் பாடம்!
- சந்தியா திலீப், கே.கே.நகர்; முருகேசன், கங்களாஞ்சேரி; பூதலிங்கம், நாகர்கோவில்; மனோ, திருச்சி; ராஜ்குமார், குன்னூர்.

மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களைக் கொண்ட பேக்கேஜிங் பொருட்கள் பற்றிய விரிவான கட்டுரை, அதிர்ச்சி.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; த.சத்தியநாராயணன், அயன்புரம்; சித்ரா, திருவாரூர்; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

செல்லுலாய்டு குயின்களுக்கு நீங்கள் கொடுத்த இன்ட்ரோ, சரவெடி.
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி; ஜெயச்சந்திரபாபு, மடிப்பாக்கம்.

ஆதார் எவ்வளவு வீக்காக இருக்கிறது என ஹேக்கர்கள் மூலம் உலகத்திற்கே தெரிஞ்சிடுச்சே!
- பிரேமாபாபு, சென்னை; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உயர்ந்த வரலாறு சொன்ன தலபுராணம், மிரளவைத்தது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

கண்காணிப்பையும் கேமராவையும் இணைத்து வித்யாஷங்கர் வடித்த பிராக்டிக்கல் கவிதை, ஆசம்!
- மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி; சேவுகப்பெருமாள், பெருமகளூர்; நவாப், திருச்சி.

நிலம், தாவரங்களைக் குறித்த பொக்கிஷ மர்மங்களை அறிய ‘ஹோம் அக்ரி’ சரியான சாய்ஸ்!
- சம்யுக்தா சுதாகர், சென்னை.

யுவகிருஷ்ணாவின் மிரட்டும் எழுத்தில், அரஸின் படக்காட்சி தரத்திலான ஓவியங்களும் பாப்லோவை வாசகர்கள் மனதில் என்றும்  வாழவைக்கும்!
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.

ரைசா - ஹரிஷ் கல்யாண் ஜோடியின் பாஸ்பரஸ் கெமிஸ்ட்ரி, உலகையே மறக்கவைக்கிறதே!
-சம்யுக்தா, கே.கே.நகர்.

சிசேரியனை விட சுகப்பிரசவத்தில்தான் ஆபத்துகள் அதிகம் என மரு.புருனோ சொன்ன தகவல்கள் செம ஷாக்.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; கைவல்லியம், மானகிரி; சரண் சுதாகர், சென்னை.