சுந்தரத் தெலுங்கினில்...
தமிழில் அரவிந்த்சாமியுடன் நடித்த ‘வணங்காமுடி’க்காக காத்திருக்கும் ரித்திகா சிங்கின் கவனம் இப்போது டோலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது. அங்கே அவர் நடித்துள்ள ‘நீவேவரோ’ படத்தின் டப்பிங்கையும் ரித்திகாவேத் பேசியிருப்பதால், சுந்தரத் தெலுங்கில் கொஞ்சம் கொஞ்சம் பேசவும் கற்றுக்கொண்டுள்ளார்.
ஃபிட்னஸ் பஜ்வா
தமிழ், மலையாளத்தில் தலா ஒரு படம் மட்டுமே கைவசம் வைத்திருக்கும் பூனம் பஜ்வா, தமிழில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர விரும்புகிறாராம். அதன் முதல்கட்ட முயற்சியாக ஃபிட்னஸ் பக்கம் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார்.
க்ளாமர் சிங்கர்
அமெரிக்காவில் லைவ் கன்சர்ட் நடத்திவிட்டு திரும்பியிருக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத். அந்த இசை நிகழ்ச்சியில் டோலிவுட் கிளாமர் கேர்ள் ஷ்ரத்தா தாஸ், பாடகி அவதாரம் எடுத்து அசத்தியிருக்கிறார். ‘‘முதல்முறையா வெளிநாட்டில் போய் பாடியிருக்கேன். நான் ரொம்ப கூலான பொண்ணு. அமெரிக்க டூரில் பாடினது ஸ்வீட் மொமன்ட்!’’ என சிலிர்க்கிறார் ஷ்ரத்தா தாஸ்.
பிரசாதம்
சமீபத்தில் ராமேஸ்வரத்துக்கு ஆன்மிக விசிட் அடித்திருக்கிறார் ‘காற்று வெளியிடை’ அதிதி ராவ் ஹைதரி. ‘‘கிராமத்துப் பெண்கள் அன்போடு வீட்டில் சமைத்த உணவுகள்தான் இந்தியாவிலேயே சிறந்த உணவு. அதுவும் கோயில்கள் சுற்றியுள்ள இடங்களில் கிடைக்கும் உணவுகளின் ருசியே அலாதிதான்...’’ என ஆச்சரியமாகிறார் அதிதி.
|