இந்துப் பெயர்களாக மாற்றுவோம்!



ராஜஸ்தான் அரசு, தேர்தல்களுக்காக இஸ்லாமிய ஊர்களின் பெயர்களை திடீரென மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது.சிட்டோர்ஹார் -  மொகம்மத்பூர், நவாப்பூர், ராம்புரா, மான்ஃபியா ஆகிய ஊர்களின் பெயர்கள் முதல்கட்டமாக இந்துமதப்பெயர்களாக மாற்றி  அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் நவம்பர் - டிசம்பரில் தேர்தல் தொடங்கவிருப்பதால் மேலும் பல்வேறு ஊர்களின் பெயர்கள்  மாற்றப்பட வாய்ப்புள்ளதாக வருவாய்த்துறை தகவல் அளித்துள்ளது.

அரசு நிர்வாக ரீதியிலான தோல்விகளை மறைக்க இப்படி பெயர்விளையாட்டை விளையாடுகிறது என காங்கிரஸ் விமர்சிக்க... பிற  அமைப்புகளும் அரசின் சீர்திருத்தம் சமூகத்தை பிளவுபடுத்தும் என கொந்தளித்துள்ளன. ‘‘இஸ்லாமியர்களைப் படுகொலை செய்வது,  வெறுப்பு அரசியல், பாடநூல்களிலிருந்து இஸ்லாமிய எழுத்தாளர்களை விலக்குவது, உருது பள்ளிகளை மூடுவது, ஊரின் பெயர்களை  மாற்றுவது என சிறுபான்மையினருக்கு இங்கு என்னதான் மிச்சமிருக்கிறது?’’ என ஆவேசமாகக் கேட்கும் இஸ்லாமிய சட்டபோர்டின்  உறுப்பினர் யாஸ்மின் ஃபரூக்கியின் கேள்விக்குத்தான் பதில்களே இல்லை.              l