சர்ப்ரைஸ் !



நடிகர் நாக சைதன்யாவை கைபிடித்து தெலுங்கு தேச மருமகளானாலும் நடிப்பிலும் சாதித்து 800 கோடி பிசினஸ் புள்ளியாக வலம் வருகிறார் சமந்தா என்பது செம சர்ப்ரைஸ் ஸ்டோரி.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; முருகேசன், கங்களாஞ்சேரி; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; சண்முகராஜ், திருவொற்றியூர்.

நிலம் வாங்கி விவசாயம் செய்ய முடியாதவர்களுக்கு ‘ஹோம் அக்ரி’ தொடர் வரப்பிரசாதம்!
- ஏ.நவாப், திருச்சி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; வளையாபதி, தோட்டக்குறிச்சி; சோழா புகழேந்தி, கரியமாணிக்கம்; நரசிம்மராஜ், மதுரை.

ஏழை மாணவர்கள் கல்வியில் உயர டெக்னாலஜி மூலம் ஏணி அமைக்கும் கேரள தேவதை நிகிதா ஹரி, அசத்தலான லட்சியப் பெண்.
- ஆ.சீனிவாசன்,எஸ்.வி.நகரம்; மயிலைகோபி, அசோக்நகர்.

நயன்தாரா மாதிரி நளின அழகு காட்டும் லினன் சேலைகள் பற்றிய அறிமுகம் சூப்பர் வசீகரம்.
- மயிலைகோபி, அசோக்நகர்.

‘கால மாற்றம்’, ‘நீதி’ ஆகிய தலைப்புகளில் வெளியான கவிதைகள் சிறப்பு.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்; நரசிம்மராஜ், மதுரை.

அருளமுதம் தரும் யோகி ராம் சுரத்குமார் பற்றிய அனுபவம் தேவாமிர்தம்.
- மயிலைகோபி, அசோக்நகர்; சங்கீதசரவணன், மயிலாடுதுறை.

கோயம்பேடு சந்தையில் எத்தனை ஆயிரம் மக்களின் வாழ்க்கை அடங்கியுள்ளது என விவரித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ தொடர், பிரமிப்பு.
- ஜி.பிரேமா, சென்னை; கைவல்லியம், மானகிரி; சைமன்தேவா, விநாயகபுரம்; முருகேசன், கங்களாஞ்சேரி.

‘மன்னார்குடி குஞ்சான் செட்டியார் கடை’ வரலாற்றோடு பக்கோடா, மெதுவடை ரெசிபி வாவ் சொல்ல வைத்தன.
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஜெரிக், கதிர்வேடு; பிரேமா, சென்னை; காந்தி
லெனின், திருச்சி.

சபர்மதி பயிற்சி மையம் மூலம் விவசாயத்தை வளர்ப்பதோடு மாவட்ட ஆட்சியராகவும் மாணவர்களை உயர்த்த பாடுபடும் குணசேகரின் சமூகப்பணி போற்றத்தகுந்தது.
- பி.ஜெரிக், கதிர்வேடு; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த ‘மெட்டி ஒலி’ டீமின் சந்திப்பு குதூகலிக்க வைத்தது.
- சு.நவீனா தாமு, திருவள்ளூர்; நாகராஜன், திருச்சி; யோகானந்தம், ஈரோடு.

குழந்தையின்மை விரக்தியில் ஏற்பட்ட கொலை குறித்த விவரங்களை விளக்கித் தீர்வு சொன்ன ‘நியூஸ் வியூஸ்’ அவசியமான ஒன்று.
- மாணிக்கவாசகம், கும்பகோணம்.

சின்சியராகப் படிக்க வைத்து செம கலாய்ப்பாக முடிந்த எஸ்.ராமனின் பக்கங்கள் சூப்பரப்பு.
- எஸ்.நாகராஜன், திருச்சி.