கல்வித் தந்தையான ரிக்‌ஷாக்காரர்!



அசாமின் பதர்கண்டி கிராமத்தில் ரிக்ஷா ஓட்டும் அஹ்மது அலி, தன் செலவு போக சேர்த்து வைத்த காசில் ஒன்பது பள்ளிகளை திறந்திருக்கிறார்!

‘‘உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பிலும், இறைவனின் கருணையிலும்தான் பள்ளிகள் உருவாயின...’’ என அடக்கமாக பேசும் அலி, தனக்குச் சொந்தமான  12 ஏக்கர் நிலத்தை விற்று, ஊராரிடம் சிறிது தொகையைப் பெற்று முதலில் தொடக்கப் பள்ளியைத் ஆரம்பித்திருக்கிறார். அதுதான் இப்போது மூன்று  தொடக்கப் பள்ளிகள், ஐந்து ஆரம்பப் பள்ளிகள், ஒரு மேல்நிலைப் பள்ளி என தோப்பாக வளர்ந்திருக்கிறது!

- ரோனி