Cat and Mouse கலகலப்பு
-மை.பாரதிராஜா
‘‘நான் நிறைய கதைகள் எழுதியிருக்கேன். ஆனா, ‘சரவணன் இருக்க பயமேன்’ ஸ்கிரிப்ட் ரெடியாகும் போதே என் உதவியாளர்கள் உற்சாகமாகிட்டாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு பிடிச்சிருந்தது. என்னோட இயக்குநர் நண்பர்கள் ராஜசேகரும், லிவிங்ஸ்டனும் கூட ‘கான்சப்ட் புதுசா இருக்கே எழில்’னு பாராட்டினாங்க.
 அப்படி ஒரு நல்ல ஸ்கிரிப்ட் உதயநிதி சாருக்கு அமைஞ்சதுல ரொம்பவே சந்தோஷம்...’’ திருப்தியாக பேசுகிறார் எஸ்.எழில். உதயநிதி, ரெஜினா நடிக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் இயக்குநர். படத்தைப் பற்றி எழில் சொல்லும் சீக்ரெட்ஸ்:
* ஊர்ல பிசினஸ் பண்ணிட்டிருக்கறவர் சரவணன். வடநாட்டுல உள்ள ஒரு கட்சிக்கு தலைவராக வேண்டியவர் சூரி. அவரோட அந்த பதவி திடீர்னு சரவணனைத் தேடி வர, அவர் கட்சித் தலைவர் ஆகறார். இதுக்கு அப்புறம் அழகான லவ் ஸ்டோரி தொடங்கிடும். ரெஜினா, ஹீரோயின்.
 சின்ன வயசில இருந்து ஹீரோவோட எலியும் பூனையுமாக இருக்கற கேரக்டர்ல கலக்கியிருக்காங்க. ரெஜினாவோட சித்தப்பா சூரி. அவரோட போஸ்ட் ஹீரோவுக்கு போனதால, செம கடுப்புல இருக்காரு. சூரியும் ரெஜினாவும் சேர்ந்து ஹீரோவை பழி வாங்க புறப்படறாங்க. இவ்வளவுதான் கதை.
* மன்சூர் அலிகான் பிரமாதமான காமெடி வில்லனா வர்றார். ரவிமரியா, யோகிபாபு, சூரி, சாம்ஸ், ரோபோ சங்கர்னு காமெடி நடிகர்கள் எல்லார்கிட்டேயும் ஒரு ஆரோக்கியமான ஒற்றுமை இருக்கு. அது படத்திலும் பிரதிபலிச்சிருக்கு. சிருஷ்டி டாங்கேவுக்கு ஒரு பாடலும் உண்டு. படத்தில் முக்கியமான ரோல் பண்ணியிருக்கிறார்.
* ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ். என்னோட ‘தேசிங்கு ராஜா’வுக்கு பேட்ச் ஒர்க் பண்ணிக் கொடுத்தவர் அவர். இமான் - யுகபாரதியின் கூட்டணில பாடல்கள் ஆல்ரெடி ஹிட்.
* என்னோட சமீபத்திய படங்கள்ல கண் கலங்க வைக்கற காட்சிகள் இருந்ததில்ல. இந்தப் படம் அப்படியில்ல. காமெடி, ஆக்ஷனோட சேர்ந்து சென்டிமென்ட் சீனும் உண்டு.
* என் படங்கள்ல காமெடி நல்லா இருக்கும்னு பெயர் வாங்கியிருக்கேன். உதயநிதி சாருக்கும் ஒரு பெரிய மாஸ் இருக்கு. நாங்க இணையுற படம் எப்படி இருக்கணும்னு உங்களுக்கு நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் காப்பாத்தியிருக்கோம்!
|