பர்த்டே ட்ரீட்!
-ரீடர்ஸ் வாய்ஸ்
தல அஜித்தின் மல்டி ஸ்பெஷாலிட்டி அவதாரமான போட்டோக்கள் ஜொலித்தன. ‘தல’ பிறந்தநாளின் ட்ரீட்டாய் அவரது போட்டோ ஆல்பம் அட்டகாசம். - கோபுகண்ணன், விழுப்புரம். நடராஜன், சிதம்பரம். த.சத்தியநாராயணன், சென்னை - 72. சுகந்தாராம், ஈக்காட்டுத்தாங்கல். மயிலை கோபி, அசோக்நகர்.
 சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக போராடி வரும் 3 வழக்கறிஞர்களுக்கும் ராயல் சல்யூட். வக்கீல் டீமின் செயல்பாடுகள் கவனம் ஈர்த்தன. இதனை செய்யவேண்டியது அரசின் கடமையும் கூட. - நவீன்சுந்தர், திருச்சி. இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
‘ஐ’ படத்தில் நடித்துள்ள மேக்கப் கலைஞர் ஓஜாஸ் ரஜானி பற்றி ஏ டூ இஸட் அறிய உதவிய ‘குங்கும’த்திற்கு வாழ்த்துகள். - ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
கணவருக்கு தெரியாமல் 2 படங்கள் பார்த்த அம்மாவின் ஆர்வம்தான், மகன் சுந்தர்.சியை இயக்குநராக்கிவிட்டது போல. - சண்முகராஜ், திருவொற்றியூர். கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
திருமணத்திற்கு விருந்தினராய் வந்து எடுபிடியாய் நடத்தப்படும் அவலத்தை சொன்ன ‘பிரியாணி’ சிறுகதை நெஞ்சைத் தொடும் படைப்பு. - மல்லிகாகுரு, சென்னை - 33.
காரை முத்தமிட்டால் கார் நமக்கு சொந்தம் செய்தி, இன்ப அதிர்ச்சி. பெண்ணுக்கு கிஸ் கொடுத்தால் சூப்பர். அதுவே காருக்கெல்லாம் 50 மணிநேர கிஸ் ஓவரோ ஓவர். - பூதலிங்கம், நாகர்கோவில். சிவகுமார், சென்னை - 33.
தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள இளம் ரத்தங்களால் இனி கோடம்பாக்கத்திற்கே கோலாகலம்தான். - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
தகிக்கும் அனல்வனத்திலும் ‘கவிதை வனம்’ நிழலின் மலர்ச்சி. குட்டி டீச்சர் நிதர்சனத்தின் துல்லிய வெளிப்பாடு. குட்டி டீச்சரை மனதில் தூக்கிவைத்து கொஞ்சினேன். - கோபு, விழுப்புரம். விஜயநிர்மலன், சென்னை-125.
இந்தியாவின் கால்பந்து இளவரசி பெம்பெம்தேவி பற்றிய செய்தி, உத்வேகம் தந்தது. இளைஞர்களின் நினைவில் எந்நாளும் அவர் இளவரசிதான். - ஆர்.சண்முகராஜ், சென்னை - 19.
‘டயலாக் இன் தி டார்க்’ அனுபவத்தில் எழுதிய கவிதையாய் மனதை நெகிழ்த்தியது. புறக்கண்களை மூடி அகக் கண்களைத் திறந்து பார்க்க உதவியது பார்வையற்றோர் குறித்த கட்டுரை. - ஆ.லோகநாதன், சென்னை - 16. கே.எஸ்.குமார், விழுப்புரம். மகாபலிபுரம் அசத்தல் அலசல். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் நகரம் என்ற செய்தி தமிழனுக்கு பெருமை. மகாபலிபுரம் குறித்த விலாவரியான தகவல்கள் அடேங்கப்பா! மினி டூர் அனுபவம். - விஜயநிர்மலன், சென்னை - 25. ஜானகி ரங்கநாதன், சென்னை - 4. லட்சுமிபுத்திரன், சென்னை - 78. பூதலிங்கம், நாகர்கோவில். ராமகண்ணன், திருநெல்வேலி. நவீன்சுந்தர், திருச்சி. த.சத்தியநாராயணன், சென்னை - 72.
|