நாகரிகமான உடை!
பொது இடத்துக்கு டீசன்டாக வரவும் என்றால், உடனே பலரது மண்டையைக் குடையும் கேள்வி, டீசன்டான டிரெஸ் எது? நாகரிக டிரெஸ்ஸுக்கான அளவுகோல்தான் என்ன? உலகில் எந்த நாட்டையும் விட இந்தியாவில் இக்கேள்விக்கு எழும் சரியா? தவறா? விவாதங்கள் எப்போதும் செம சூடுதான். இம்முறை சர்ச்சைக்கு சாவி போட்டது டெல்லியின் ஐஐடி.
 அங்குள்ள பெண்கள் ஹாஸ்டலுக்கு வார்டன் அனுப்பிய சர்க்குலரில், ‘அடுத்த சில தினங்களில் நடைபெறும் ஹவுஸ்டே தினத்தில் பங்கேற்கும் மாணவிகள், நன்கு உடலை மறைக்கும் டீசன்டான டிரெஸ் அணிந்து வரவேண்டும்’ என குறிப்பாக அழுத்தி எழுதப்பட்டிருந்தது பெண்களுக்கு கடும் அதிர்ச்சி தர, உடனே ஃபேஸ்புக்கில் அந்த சர்க்குலர் புகைப்படமாக ஏற்றப்பட்டது.
மைக்ரோ நொடியில் அந்த சர்க்குலர் வார்த்தைகள் பலரிடமும் கண்டனங்களை குவிக்கத் தொடங்க, ‘அந்த வார்த்தைகள் வார்டனின் தனிப்பட்ட கருத்துதான். நாங்கள் அந்த சர்க்குலரை வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டோம்’ என சமாளித்திருக்கிறார் ஐஐடியின் பேராசிரியரான ராம்கோபால் ராவ்.
|