இருமுகனில் எத்தனை விக்ரம்?



தாய்லாந்தின் ஃபுக்கெட் கடற்கரையை ஒட்டிய நீச்சல் குளத்தில் செம கிளாமர் நயன்தாராவுடன் ‘ஹெலனா...’ என எடிட்டிங் ஸ்டூடியோ மானிட்டரில் ரொமான்டிக் கொண்டிருந்தார் விக்ரம். ‘‘ஹாரிஸ் சார் இப்போ ஒரு மியூசிக் பிட் அனுப்பியிருக்கார். செகண்ட் ஷாட் ‘கட்’ல சேர்த்துக்கலாம்...’’ என எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசனைப் பணித்துவிட்டு, நம்மை வரவேற்கிறார் ‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர். ‘‘என்னோட ‘அரிமா நம்பி’ படம் விக்ரம் சாருக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு.



‘உங்ககிட்ட கதை இருக்கா?’னு கேட்டார். அவருக்காக நான் கதை எதையும் ரெடி பண்ணி வைக்கல. யதேச்சையா அப்போ தோணின ஒரு ஒன்லைனை சொன்னேன். ‘இன்ட்ரஸ்ட்டிங். உடனே ரெடி பண்ணுங்க’னு என்கரேஜ் பண்ணினார். ஒன்றரை மாச இடைவெளியில் முழுக் கதையோடு அவர்கிட்ட போய் நின்னேன். ‘இவ்ளோ சீக்கிரமே ரெடியாகிடுச்சா’னு அவருக்கு சர்ப்ரைஸ்!’’

‘‘எப்படி வந்திருக்கு ‘இருமுகன்’?’’
‘‘நல்லாவே வந்திருக்கு. என்ன பிளான் பண்ணியிருந்தோமோ, அது அப்படியே வந்திருக்கு. நான் இயக்குற ரெண்டாவது படத்துலேயே டாப் மோஸ்ட் ஆர்ட்டிஸ்ட்கள் எனக்கு அமைஞ்சிருக்காங்க. முழு ஷூட்டிங்கும் முடிஞ்சு, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பரபரக்குது. ‘இருமுகன்’ங்கறது கதையில வரக்கூடிய ஒரு விஷயம். விக்ரம் சார் இதுல ‘ரா’ உளவு நிறுவனத்தோட ஏஜென்ட். சிறப்புப் புலனாய்வு அதிகாரியான அவர், மலேசியா போறார்.

எதுக்காக அவர் அங்கே போறார்? என்ன பண்ணப் போறார்? அப்படீங்கறதுதான் கதை. ரெகுலர் ஆக்‌ஷனைத் தாண்டி ரொமான்டிக், சயின்ஸ் ஃபிக்‌ஷன்னு எல்லாம் சேர்ந்த கலவை இது. கதை ஒரே இடத்துல நிக்காது. மலேசியா, காஷ்மீர், தாய்லாந்துனு ட்ராவல் ஆகிட்டே இருக்கும். படத்துல விக்ரம் சாரோட உதவியாளர் நயன்தாரா. உளவுத்துறை ஆபீஸர் நித்யா மேனன். தவிர, தம்பிராமையா, கருணாகரன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. செப்டம்பர்ல களம் இறங்குறோம்!’’

‘‘விக்ரம்...’’
‘‘ஆரம்பத்துல இந்த ப்ராஜெக்ட் தொடங்குமானு கொஞ்சம் கலங்கினேன். அப்பல்லாம் எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் விக்ரம் சார்தான். அவரோட கேரக்டரை உள்வாங்கினதும் ‘அந்தக் கேரக்டர் மேனரிஸம் இப்படித்தான் இருக்கணும்... இந்த அளவு பேசினா போதும்... லுக் இப்படி இருந்தா இன்னும் பெட்டர்’னு நிறைய விஷயங்களை இன்வால்வ் ஆகி சொன்னார். தாடி நிறைய வேணும், முறுக்கேறிய உடம்பு வேணும்னு சொன்னேன். ‘ஐ’ படம் முடிச்சிட்டு அவர் வந்திருந்த டைம் அது.

மெலிஞ்சு இருந்தார். ‘முதல்ல உடம்பை நார்மலுக்கு கொண்டு வந்துடுறேன். உடல் எடை கூடினதும் ஜிம்முக்குப் போனால்தான் பாடி ஃபிட்டா இருக்கும்’னு சொன்னார். ஆறு மாத விடாமுயற்சிக்குப் பின், செம ஃபிட் ஹீரோவா வந்து நின்னார். படத்தோட டைட்டில் ‘இருமுகன்’னு இருக்கறதால ரெண்டு விக்ரம் இருக்காங்களானு தோணும். அது சஸ்பென்ஸ்!’’

‘‘நயன்தாரா...’’
‘‘சூப்பர் ஆர்ட்டிஸ்ட். முதல் ரெண்டு நாள் ஷூட் போகும்போதே, அவங்களுக்கு இந்த ஸ்க்ரிப்ட் மேல கான்ஃபிடன்ஸ் வந்துடுச்சு. அப்புறம் அவங்களே ஆர்வமா ஹார்ட் வொர்க் பண்ணினாங்க. ‘ஹெலனா’ ஸாங் டீஸர் ரிலீஸ் ஆனதும், அதைப் பார்த்த எல்லாருக்குமே விக்ரம் - நயன்தாரா கெமிஸ்ட்ரி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கு. காஷ்மீர் ஷூட் அப்போ, அங்கே செம குளிர். மலைப் பிரதேசத்தில் டாப் இல்லாத கார்ல விக்ரமும், நயனும் ட்ராவல் ஆகுற சீன் ஷூட் பண்ணினோம்.

விக்ரம் அந்தக் காரை டிரைவ் பண்ணணும். அவர் பக்கத்துல நயன்தாரா லேசான காஸ்ட்யூம்ல நின்னுட்டே போகணும். ஆபத்தான மலைப் பாதையில, தடுப்புகள் ஏதுமில்லாத அபாயகரமான வளைவுகள்ல விக்ரம் சரியா காரை ஓட்டணும். இல்லாட்டி பேலன்ஸ் இல்லாம நயன்தாரா கீழே விழுந்துடுவாங்க. இப்படி ஒரு ரிஸ்க்ல அந்தக் குளிரையும்  பொருட்படுத்தாம ரெண்டு பேருமே உழைச்சாங்க!’’

‘‘நித்யா மேனன்...’’
‘‘அவங்க செம பர்ஃபார்மர். ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடியே படத்துல அவங்க பேச வேண்டிய டயலாக்ஸ், ஸ்கிரிப்ட் எல்லாம் கேட்டு வாங்கினாங்க. திடீர்னு அவங்ககிட்ட இருந்து போன் வரும். ‘இந்த டயலாக் எப்படி டெலிவரி பண்ணணும்?’னு கேப்பாங்க. அதோட முழு அர்த்தமும் கேட்டுத் தெரிஞ்சு பண்ணினாங்க. எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. நித்யா மேனனின் இன்வால்வ்மென்ட்டைப் பார்த்து, அவங்க கேரக்டரை இன்னும் வலிமையாக்கத் தோணிச்சு!’’

‘‘டெக்னீஷியன்ஸ்..?’’
‘‘நான் ஏ.ஆர்.முருகதாஸ் சார்கிட்ட வொர்க் பண்ணும்போதே, ஆர்.டி.ராஜசேகர் சார் அறிமுகம். என் முதல் படத்தோட ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் சார். எடிட்டர் கர் பிரசாத் சாரோட அசிஸ்டென்ட் புவன்ஸ்ரீனிவாசன் எடிட்டிங். அவங்களேதான் இதிலும். ஹாரிஸ் சார்கிட்ட ‘இப்படித்தான் பாடல்கள் வேணும்’னு எந்த விதத்திலும் ப்ரஷர் கொடுக்கல. ‘கதைக்கு என்ன தேவையோ, அதைக் கொடுங்க. இசையை உங்க சாய்ஸ்லயே விட்டுடுறேன்’னு பொறுப்பை அவர்கிட்ட விட்டுட்டேன்.

பிரமாதமா வொர்க் போகுது.  ஆக்‌ஷன் போர்ஷன்ஸை பாலிவுட் மாஸ்டர் ரவிவர்மா, ‘கபாலி’ அன்பறிவ் ரெண்டு பேரும் கவனிச்சிருக்காங்க. இந்தி ‘க்ரிஷ்’ படத்தோட ஆர்ட் டைரக்டர் சுரேஷ் செல்வராஜன் செட் வொர்க்ஸ் ரொம்ப நுட்பமா இருக்கு. ஒரு புதுவிதமான கதைக்கு அனுபவமிக்க டெக்னீஷியன்கள் எனக்குக் கிடைச்சிருக்கறது பெரிய பலம்... வரம்!’’

‘‘ஏ.ஆர்.முருகதாஸ்கிட்ட வேலை பார்த்த அனுபவம்...’’
‘‘அவர்கிட்ட சேருறதுக்கு முன்னாடி ஒரு இந்திப் படத்துல வொர்க் பண்ணியிருக்கேன். முருகதாஸ் சாருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவர்கிட்ட தீயா வேலை பார்க்கணும். காலையில ஏழு மணிக்கு தொடங்குற வொர்க், ராத்திரி 11 மணி வரை நான் ஸ்டாப்பா போகும். அவரும் அப்படி கடினமா உழைப்பார். சளைக்காமல் அஞ்சு வருஷம் அவர்கிட்ட வொர்க் பண்ணேன். ‘துப்பாக்கி’க்கு முன்னாடி வெளியே வந்தேன். சினிமாவைப் பத்தி அவர்கிட்ட கத்துக்கிட்ட விஷயங்கள் இன்னிக்கு ரொம்ப உதவியா இருக்கு. இப்ப ‘இருமுகன்’ டீஸர் பார்த்துட்டு பாராட்டினார்!’’

‘‘ஷூட்டிங் அனுபவங்கள் சுவாரஸ்யமா இருந்திருக்குமே?’’
‘‘இந்தப்  படத்தோட தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் கேரளாவில் விஜய் சாரோட படங்கள் நிறைய  டிஸ்ட்ரிபியூட் பண்ணினவர். ஒரு தயாரிப்பாளர்ங்கறதை விட, ஒரு ரசிகனா இருந்து  கதை கேட்டார். ‘ரசிகர்கள் இந்த இடத்துல கை தட்டி ரசிப்பாங்க, இங்கே  ஃபீல் ஆவாங்க’னு நான் நினைச்ச மாதிரியே அவரும் சொன்னார். இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைச்சிருக்கறது இன்னும் உற்சாகமா உழைக்க வச்சிருக்கு. நாங்க  மலேசியா ஷூட்டிங் போன டைம்ல தான் ‘கபாலி’ படப்பிடிப்பும் போய்க்கிட்டிருந்தது.

மலேசிய போலீஸ் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அங்கே ஒரு நெரிசலான மார்க்கெட்ல ஷூட்.  தமிழ் மக்கள் நிறைய பேர் இருந்தாங்க. ஆனாலும் அது ஷூட்டிங்னு மத்தவங்களுக்கு தெரியறதுக்கு முன்னாடி ஷூட் பண்ணிடணும்னு ப்ளான் பண்ணி வொர்க் பண்ணினோம். கோலாலம்பூர் போற  வழியில் ஒரு பெரிய பாலத்துல நாலஞ்சு சீக்வென்ஸ் எடுத்தோம். எங்களுக்காக பாலத்தோட ரெண்டு பக்கமும் லாக் பண்ணி, ஷூட்டிங் எடுக்க அனுமதிச்சது மறக்க முடியாத அனுபவம்!’’

- மை.பாரதிராஜா