ஒரு லட்சம் எஞ்சினியரிங் சீட் காலி!



அண்ணா பல்கலைக்கழக எஞ்சினியரிங் முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்துவிட்டது. இதன் முடிவில், தமிழகத்தில் ஒரு லட்சம் எஞ்சினியரிங் சீட் காலியாக உள்ளது. ஏன்? என்ன நிலவரம்?



* தமிழ்நாட்டில் மொத்த எஞ்சினியரிங் கல்லூரிகள் - 523

* கவுன்சிலிங் மூலம் இந்த ஆண்டு நிரப்ப வேண்டிய இடங்கள் - 1,92,009

* எஞ்சினியரிங் சேர்க்கைக்கு வந்த தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் - 1,31,182

* எனவே கவுன்சிலிங் ஆரம்பிக்கும்போதே ஏற்பட்ட காலியிடங்கள் - 60,827

* கவுன்சிலிங் மூலம் சேர்க்கை பெற்ற மாணவர்கள் - 84,352

* எஞ்சினியரிங் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் - 1,07,657

* தமிழக எஞ்சினியரிங் கல்லூரிகள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கும் எஞ்சினியர்கள் - சுமார் 3 லட்சம்

* தமிழகத்தில் எஞ்சினியரிங் சேரும் கிராமப்புற மாணவர்கள் - 68 சதவீதம்

* எஞ்சினியரிங் சேரும் நகர்ப்புற மாணவர்கள் - 32 சதவீதம்

* போதுமான மாணவர்கள் சேராததால் கடந்த ஆண்டு தமிழகத்தில் மூடப்பட்ட எஞ்சினியரிங் கல்லூரிகள் - 22

* தொழில்துறைகளின் பணித்தேவைக்கு ஏற்றவிதத்தில் தயாரா காமல் எஞ்சினியரிங் முடிக்கும் மாணவர்கள் - 80 சதவீதம்

* சேவைகளில் தானியங்கி தொழில்நுட்பம் நுழைவதால் இந்திய ஐ.டி துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் நேர இருக்கும் வேலை இழப்புகள் - 6,40,000

* வளமான எதிர்காலம் உள்ள பணிகளாகக் கருதப்படுபவை - டேட்டா சயின்டிஸ்ட், புராடக்ட் டிஸைனர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்ஸ்பர்ட், சொல்யூஷன் ஆர்க்கிடெக்ட்


* சிறந்த எதிர்காலம் உள்ள துறைகள் - இன்டர்நெட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், மொபைல் ஆப், க்ளவுட் கம்ப்யூட்டிங், ஐ.டி செக்யூரிட்டி