வண்ணத்திரைக்கு 38 வயசு!
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
![](http://kungumam.co.in/vannathirai_images/2019/20190927/14.jpg) ‘வண்ணத்திரை’ வார இதழ் 38 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இத்தனை காலமும் வாசகனாக தொடர்கிறேன் என்பது எனக்கு பெருமகிழ்ச்சி. - கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.
சுரா தொகுத்தளித்த கொசுறு மேட்டர் எல்லாமே செம காரம். வாராவாரம் கொசுறுவை எதிர்ப்பார்ப்போம். - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
அட்டையின் மேடு பள்ளங்களை தாண்டி இதழுக்குள் வரவே அரைமணி நேரம் ஆயிற்று சார். - பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.
‘சரோஜாதேவி பதில்கள்’ பகுதிக்கு நீங்கள் உருட்டும் கட்டைகள் எல்லாமே சூப்பர். புளோ-அப்பில் பெயர் போடுவது மாதிரி, இந்தப் படங்களிலும் பெயர் போட்டால் யாரென்று தெரிந்து எங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்வோம். - கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
பேரரசு பேட்டி பிரமாதம். மீண்டும் விஜய்யோடு இணைந்து அவர் படம் செய்யப்போவதாக செய்திகள் கசிந்திருக்கும் நிலையில், அதிரடியாக பேட்டி போட்டு அசத்தி விட்டீர்கள். - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
‘ஷகீலா அக்கா எனக்கு நல்ல நண்பர். அவர் நடித்த படங்களை வைத்து அவரது கேரக்டரை தீர்மானிக்கக் கூடாது’ என்று சொல்லும் சுரேஷின் கருத்து சிறப்பு. - கே.நடராஜன், திருவண்ணாமலை.
‘டைட்டில்ஸ் டாக்’ பகுதி, இதுவரை நாங்கள் அறிந்த மனிதர்களின் அறியாத பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சுகிறது. தொகுத்து வழங்கும் சுரேஷ்ராஜாவுக்கு நன்றிகள். - சி.அப்பாஸ், பெரிய கலையம்புதூர்.
|