காதலிக்க நேரமில்லையாம்!



பழம்பெரும் நடிகரின் பேத்தி என்கிற கோதாவில் களமிறங்கினார். மூன்று படங்கள்தான் வெளிவந்திருக்கின்றன. மூன்றும் பெருசாக ஏதும் சொல்லிக் கொள்ளும்படி இல்லையென்றாலும் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் டாக அவர் உருவெடுத்திருப்பதின் ரகசியம் என்னவென்று புரியாமல் போட்டி நடிகைகள் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

சொல்லிவைத்தாற்போல அத்தனை ஹீரோக்களும் இவரோடுதான் ஜோடி போட ஆசைப்படுகிறார்களாம். ஆட்டம் பாட்டத்துக்கு பேர் போன நடிகரும், இயக்குநருமான தாடி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். முன்பு சின்னதம்பி நடிகரோடு இணைந்து அவர் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. அதில் பேத்தியை தன்னோடு ஜோடி போடச் சொல்லி போன் போட்டிருக்கிறார் தாடி.
“மன்னிக்கணும் சார்.

கால்ஷீட் டயரி ரெண்டு வருஷத்துக்கு ஃபுல் ஆயிடிச்சி” என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டாராம் பேத்தி.காரணம் கேட்டவர்களிடம், “பின்னே என்னங்க? அவரோட யாரு நடிச்சாலும் அவரை காதலிச்சே ஆகணுமாமே? எனக்கு காதலிக்க நேரமில்லை” என்று சூப்பர் ஸ்டோர்ஸ் கொலுசு மாதிரி கலகலவென்று சிரிக்கிறாராம்.படத்திலிருக்கும் பாட்டி, பேத்தி அல்ல.

- துப்பறிவாளன்