கிளாமர் ரூட்டில் சிருஷ்டி!



ஒரு படத்திலாவது இலியானாவுடன் டூயட் பாட ஆசைப்படும் விஷால், அதை ஒவ்வொரு விழாவிலும் சொல்கிறார். என்றாலும், அவரை இயக்குபவர்கள் யாரும் அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. காரணம், இலியானா கறார் பார்ட்டி. தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்த அவர், பிறகு விக்ரம் கே.குமார் இயக்கிய படத்தில், விக்ரம் ஜோடியாக ஒப்பந்தமானார். அதற்கு 50 லட்ச ரூபாய் அட்வான்ஸ் வாங்கினார். ஆனால், திடீரென்று படம் கைவிடப்பட்டது. இலியானா ஒருநாள் கூட நடிக்கவில்லை.

ஆனால், இன்றுவரை அந்த அட்வான்ஸ் தொகையை தயாரிப்பாளர் மோகன் நடராஜனுக்கு திருப்பித் தரவில்லை. அவரும் பல சங்கங்களில் புகார் கொடுத்து போராடிப் பார்த்தார். பலன் இல்லை. எனவே, இலியானாவை ஒப்பந்தம் செய்வதில்லை என்று இங்குள்ள இயக்குனர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

‘காதலாகி...’, ‘மேகா’, ‘டார்லிங்’ படங்களில் நடித்த சிருஷ்டி டாங்கே, அடுத்த பட வாய்ப்புக்காக இவ்வளவு கீழிறங்கி நடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. சித்தார்த், தீபா சன்னதி நடித்துள்ள ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில், கிளாமர் விஷயத்தில் எள் என்றால் எண்ணெயாக நடித்துள்ளாராம் சிருஷ்டி. அதுபோல், ‘பிதாமகன்’ சங்கீதாவின் கணவர் பாடகர் கிரிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ படத்திலும் கிளாமரில் பின்னியெடுத்து இருக்கிறாராம். இவர் படுசாந்தமாக நடித்துள்ள ‘வருசநாடு’ பற்றி வாயே திறப்பதில்லை.

தேவராஜ்