முதல் குத்து முத்திரைக்குத்து!



குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட கணேஷ் வெங்கட்ராமன் முதன் முறையாக ‘அச்சாரம்’ படத்தில் பூனம் கவுருடன் சேர்ந்து  ‘உன்ன விடமாட்டேன்’ என்ற குத்துப் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். ராதாமோகனின் உதவியாளர் மோகன் கிருஷ்ணா இதன் இயக்குனர். இசை ஸ்ரீகாந்த் தேவா.

‘‘முதன் முறையாக இப்போதுதான் குத்துப் பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன். அதுவும் குத்துப் பாடலுக்கு பேர் போன ஸ்ரீகாந்த் தேவா இசையில் நடனமாடியது சந்தோஷமாக உள்ளது.

இந்த முதல் குத்தில் முத்திரை பதித்துள்ளேன். எனக்கு சாக்லெட் பாய் என்ற இமேஜ் உருவாகிவிட்டது. அந்த இமேஜைத் தூக்கிப் போடுமளவுக்கு இதில் எனக்கு சிறப்பான ரோல். அந்த வகையில் கிராமப்புற ரசிகர்களிடம் இந்தப் படத்தின் மூலம் பேர் வாங்குவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் கணேஷ்.

-ரா