சமந்தாவின் சென்டிமென்ட்!



சமந்தாவை படத்தில் ஒப்பந்தம் செய்தாலே, பிரச்னை பிளைட் ஏறி வந்துவிடுவதாக ஒரு சென்டிமென்ட் கோலிவுட் ஏரியாவில் பரவியிருக்கிறது. சூர்யாவுடன் நடித்த ‘அஞ்சான்’, விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படங்களுக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்ததை அனைவரும் அறிவர்.

இதற்கும், சமந்தா நடிப்பதற்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். ஆனால்,  பேசுபவர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள். இதை சமந்தா தரப்புக்கு யாராவது தெரியப்படுத்தினார்களா இல்லையா என்று தெரியாது. எப்பூடி எல்லாம் கயிறு திரிக்கிறாய்ங்க பாருங்க...

சேரனின் ‘ஆட்டோகிராப்’ மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை கோபிகா.  சினிமாவில் பிசியாக இருக்கும்போதே வெளிநாட்டில் வசிக்கும் டாக்டர் அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர், பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார்.

அவர்களுக்கு எமி என்ற நான்கு வயது மகள் இருக்கிறாள். அவள் நன்கு வளர்ந்ததால் மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் நடித்த கோபிகா, பிறகு நல்ல வாய்ப்பு கிடைக்காத நிலையில், கணவர் மற்றும் மகளுடன் ஆஸ்திரேலியாவில் குடியேறினார். மீண்டும் அவருக்கு நடிக்கும் எண்ணம் இல்லையாம். இந் நிலையில், மீண்டும் அவர் கர்ப்பமானார். சில நாட்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கோபிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவரை அஜிலேஷ் அருகி லிருந்து கவனித்துக் கொண்டாராம்.

தேவா