ஆஹாவும் இல்லை வேஸ்ட்டும் இல்லை!



கோயமுத்தூரிலிருந்து அமெரிக்காவுக்கு படிப்புக்காக சென்றவர் கே.ஜி.செந்தில்குமார். பறக்கும் போதே  சினிமா ஆசையையும் சுமந்து சென்றுள்ளார். காலையில் படிப்பு, மாலையில் பிட்சா கடையில் வேலை என்று அறிவையும், பணத்தையும் சேர்த்த பிறகு இவர் கால் பதித்த இடம் கோடம்பாக்கம்.

ஆரம்பத்தில் ‘சிம்பிள் சிட்டி’ உட்பட சுமார் 25 குறும்படங்களை எடுத்து சினிமாவுக்காக தன்னை பட்டை தீட்டிக்கொண்டாராம். அதன் தொடர்ச்சியாக இப்போது இவர் இயக்கி நடிக்கும் படம் ‘விழி மூடி யோசித்தால்’. புதுமுகம் நிகிதா நாயகி. ஹீரோவின் அம்மாவாக ஊர்வசி நடித்திருக்கிறார். பழைய மாணவர்கள் சங்கத் தலைவராக பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார்.

“இது ரொமான்டிக் த்ரில்லர் கதை. சாதாரண மனிதனாக வாழும் ஒருவனின் வாழ்க்கை எப்படி சமுதாயத்தோடு கலக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு ஆஹா என்றும் சொல்லமாட்டார்கள், பணமும் நேரமும் வேஸ்ட் என்றும் சொல்லமாட்டார்கள். ஏன்னா, இது யாரும் சொல்லாத கதை” என்கிறார் கே.ஜி.செந்தில்குமார்.

ரா