சோயா அல்வா



என்னென்ன தேவை?

சோயா மாவு - 1/2 கப்,
கோதுமை மாவு - 1/2 கப்,
சர்க்கரை - 2 1/2 கப்,
நெய் - தேவையான அளவு,
ஃபுட் கலர் (பச்சை) - ஒரு சிட்டிகை,
ஏலக்காய் தூள் - சிறிதளவு,
தண்ணீர்- தேவைக்கு,
முந்திரி - 7.

எப்படிச் செய்வது?

சோயா மாவையும் கோதுமை மாவையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அதில் ஃபுட் கலரையும் சேர்க்கவும். சர்க்கரையை கப் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதி வந்தவுடன் அதில் மாவை கொட்டிக் கிளறவும். நன்கு வெந்து வந்தவுடன் நெய் சேர்த்து ஒட்டாமல் வரும் வரை கிளறவும். அத்துடன் சிறிது நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லை போடவும். அப்படியேவும் சாப்பிடலாம்.