சோயா பொட்டெடோ



என்னென்ன தேவை?

சோயா சன்க்ஸ் - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 2,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
கிச்சன் கிங் மசாலா - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - அலங்கரிக்க.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து அரைத்து வைத்துக் கொள்ளவும். சோயா சன்க்ஸை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். சோயா சன்க்ஸை இந்தக் கலவையில் போட்டு வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளையும் சேர்க்கவும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கிச்சன் கிங் மசாலா சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, உப்புச் சேர்த்து, கொத்தமல்லி தூவி பூரி அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.