டோஃபு மஞ்சூரியன்



என்னென்ன தேவை?

டோஃபு - 1 பாக்கெட்,
குடை மிளகாய் - 1,
வெங்காயம் - 1,
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி,
மைதா - 4 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
தக்காளி சாஸ் - 1/2 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மைதாவில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தண்ணீருடன் பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். டோஃபுவை சதுர துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். டோஃபு துண்டங்களை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், குடை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கலந்துவிடவும். அதில் பொரித்த டோஃபு துண்டங்களை போட்டுக் கிளறி வெங்காயத்தாள் கொண்டு அலங்கரித்து உடனே பரிமாறவும்.