உளுந்தம் பருப்பு தால்



என்னென்ன தேவை?

உளுந்தம் பருப்பு - 1 டம்ளர்,
சின்ன வெங்காயம் 10 அல்லது பாதி பெரிய வெங்காயம்,
பச்சை மிளகாய் - 2,
காய்ந்த மிளகாய் - 2,
இஞ்சி - 1 இஞ்ச் அளவு,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை -  சிறிது,
எண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

தோல் நீக்கிய உளுந்தம் பருப்பை கழுவி, சுத்தம் செய்து குக்கரில் எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை வட்ட வட்டமாக நறுக்கி, பச்சை மிளகாய் இரண்டையும் உளுந்துடன் சேர்த்து அளவாக நீர் விட்டு வேக வைக்கவும். உப்பு சேர்க்கவும். எண்ணெயில் அல்லது நெய்யில் இஞ்சி, இரண்டு சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி உளுதம் பருப்புடன் சேர்த்து பரிமாறவும்.